Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லையில் வாலாட்டும் சீனாவுக்கு செக் வைக்க சூப்பர் திட்டம்..27 ஆயிரம் கோடி மதிப்பு..இந்தியா பிளான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எல்லையில் சமீப காலமாக அடிக்கடி அத்துமீறும் சீனாவுக்கு செக் வைக்கும் விதமாக சூப்பர் திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை உள்ளது. குறிப்பாக இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாசல பிரதேசத்திற்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

எல்லையில் அடிக்கடி ஊடுருவுவதும் இந்திய படைகள் விரட்டியடிக்கும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடக்கும் சம்பவங்களாக மாறி வருகிறது.

இந்தியா சீனா பிரச்சினை

இந்தியா சீனா பிரச்சினை

குறிப்பாக கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய ராணுவ வீரர்களுடன் சீன படையினர் கை கலப்பில் ஈடுபட்டனர். இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இது இந்தியாவை கொந்தளிக்க செய்தது. இந்திய வீரர்கள் திருப்பி அடித்ததில் 40 சீன வீரர்கள் வரை கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்த மோதல் சம்பவத்திற்கு பிறகு எல்லையில் பதற்றம் அதிகரித்தது. இந்தியா - சீனா இடையேயான உறவிலும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானது.

கண்காணிப்பு பணியில்..

கண்காணிப்பு பணியில்..

இந்த பதற்றத்தை தணிக்க பல சுற்றுக்களாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு எல்லையில் பல இடங்களில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் தங்களது முந்தைய இடத்திற்கு சென்றனர். இருந்தாலும் சீனா எப்போது வேண்டும் என்றாலும் வாலாட்டலாம் என்பதால் எல்லையில் இந்திய படைகள் உன்னிப்பாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தன.

ஓட ஓட விரட்டியடிப்பு

ஓட ஓட விரட்டியடிப்பு

இந்த நிலையில் தான் கடந்த 9 ஆம் தேதி அருணாசல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் சீன படைகள் மீண்டும் அத்துமீறின. ஆனால், எதற்கும் தயாராக இருந்த இந்திய படைகள் சீன வீரர்களை ஓட ஓட விரட்டியடித்தனர். இதனால், தப்பித்தோம் பிழைத்தோம் என சீன வீரர்கள் ஓட்டம் பிடித்தனர். இந்த மோதலில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாடாளுமன்றத்திலும் விளக்கம் அளித்து இருந்தார்.

இருவழிச்சாலை அமைக்க திட்டம்

இருவழிச்சாலை அமைக்க திட்டம்

இந்த நிலையில், சீனாவின் வாலாட்டலுக்கு செக் வைக்கும் விதமாக சூப்பர் திட்டம் ஒன்றை இந்தியா செயல்படுத்த உள்ளது. அதாவது தீபெத், சீனா, மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதிகள் வழியாக சுமார் 1,748 கி.மீட்டர் தொலைவுக்கு இரு வழிச்சாலை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த சாலை சில இடங்களில் சர்வதேச எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீட்டர் தொலைவில் அமைய இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவின் எல்லை பாதுகாப்புக்கு

இந்தியாவின் எல்லை பாதுகாப்புக்கு

NH-913 என முன்மொழியப்பட்ட இந்த சாலை பாதுகாப்பு தளவாடங்களை எல்லை பகுதிகளுக்கு விரைவாகவும் எளிதாகவும் கொண்டு செல்லும் வகையில் அமையும் என்று தெரிகிறது. சீனா அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவின் எல்லை பாதுகாப்புக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த சாலை கட்டமைப்பு இருக்கப்போவதாக நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நெடுஞ்சாலை பொம்டிலா என்ற இடத்தில் தொடங்கி நஃப்ரா ஹுரி மற்றும் மோனிகோங் வழியாக செல்லும். இந்த பகுதிகள் இந்தியா - திபெத் எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. சீன எல்லையை ஒட்டி அமைந்து இருக்கும் ஜிடோ வழியாகவும் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 27 ஆயிரம் கோடி மதிப்பு

27 ஆயிரம் கோடி மதிப்பு

இந்த ஒட்டுமொத்த சாலையும் 9 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த சாலை திட்டத்திற்கான மதிப்பு 27 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி கூறியிருந்தார். ஆனாலும் இந்த செலவினங்களை குறைப்பதற்கான சாத்தியங்களையும் பரிசீலித்து வருகிறது. இந்த சாலையில் 800 கி.மீட்டர் பாதை பசுமை வழியாக அமைய உள்ளது. ஏனென்றால் சாலைகள் இப்பகுதிகளில் இல்லை. புதிதாக அமைக்கப்பட உள்ளது. சில சுரங்கங்கள் மற்றும் மேம்பாலங்களுடன் இந்த சாலை அமைய உள்ளது. இந்த சாலை திட்டம் 2026-27 ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு அடையும் என்று அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+