மசோதாக்களை திருப்பி அனுப்பினால் ஆளுநர் காரணத்தை சொல்லத்தான் வேண்டும்: தமிழ்நாடு அரசு வாதம்
டெல்லி: சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை திருப்பி அனுப்பும் போது ஆளுநர் அதற்கான காரணங்களை சொல்லத்தான் வேண்டும்; தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அப்படி எந்த காரணத்தையும் சொல்லவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு வாதிட்டது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, பிஆர் வில்சன் ஆகியோர் ஆஜராகினர்.

இன்றைய வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பு வாதம்:
- மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
- ஆளுநரின் செயலால் 8 கோடி தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
- 8 கோடி தமிழ் மக்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை உள்ளது
- 2020-ம் ஆண்டு முதல் 13-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை
- எந்த ஒரு காரணமும் இல்லாமல் மசோதாக்களை ஆளுநர் ரவி நிராகரிக்கிறார். ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்துக்கு வந்து முறையிட முடியாது.
- I withhold assent என்ற குறிப்புடன் மட்டுமே ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பியதால் சட்டசபையில் மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம்.
- ஆளுநர் withhold assent என்ற வெறுமனே சொல்ல முடியாது; அதற்கு காரணத்தை குறிப்பிட வேண்டும் என்கிறது அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவு.
- மசோதாக்களை ஆளுநர் எந்த குறிப்பும் இல்லாமல் திருப்பி அனுப்பி இருப்பது சட்டத்தை மீறியதாகும்.
- சட்டசபையில் 2-வது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பினால் அதை ஜனாதிபதிக்கு அனுப்ப முடியாது; மசோதாக்களை ஆளுநரால் கிடப்பில் போடவும் முடியாது.
- ஆளுநர் முடிவுக்காக காத்திருப்போம் என்பது அச்சத்தை தரக் கூடியதாக இருக்கிறது
- மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும்.
- மாநில அரசு மற்றும் அமைச்சர்கள் ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் ஒவ்வொரு நிபந்தனையையும் மீறி இருக்கிறார்.
- 2வது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும்
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
வங்கி கடன் செட்டில்மென்ட்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications