Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த 383 கோடி என்னாச்சு? கெஜ்ரிவாலுக்கு துணை நிலை ஆளுநர் கடிதம்.. தொடர்ந்து புகையும் டெல்லி அரசியல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் ஏற்கெனவே அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் ஏழாம் நிலை பொருத்தம் இருந்து வரும் நிலையில் தற்போது ஆளுநர், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக முதலமைச்சர் அலுவலகம் தரப்பில் ஆளுநரின் ஒப்புதல் கோரி அனுப்பப்பட்ட கோப்புகள் அனைத்து திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், தற்போது இந்த கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.

கடந்த சில நாட்களாகவே சிபிஐ ரெய்டு, டெல்லி அரசின் முக்கிய புள்ளிகள் மீது குற்றச்சாட்டு என ஆம் ஆதமி அரசுக்கு நெருக்கடி நீடித்து வந்துள்ள நிலையில் மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என கேள்வியெழுந்துள்ளது.

 தொடர் மோதல்

தொடர் மோதல்

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த அரசுக்கும், ஆளுநருக்கும் தொடர்ந்து மோதல் போக்குகள் நீடித்து வருகின்றன. துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் சிபி ரெய்டு ஆகியவை இந்த மோதல் போக்கின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் பெரிதாக கருதாமல் குஜராத் மாநில தேர்தல் பரப்புரையில் ஆம் ஆத்மி கவனம் செலுத்தி வருகிறது.

கோப்புகளை திருப்பி அனுப்பிய ஆளுநர்

கோப்புகளை திருப்பி அனுப்பிய ஆளுநர்

இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்னர் சில கோப்புகளை ஆளுநர் மாளிகைக்கு முதலமைச்சர் அலுவலகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த கோப்புக்களை ஆளுநர் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பியிருந்தார். காரணம் இந்த கோப்புக்களில் முதலமைச்சர் கையெழுத்திடாமல், அலுவலர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதனை காரணம் காட்டிதான் கோப்புகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதம்

கடிதம்

இந்த கடிதத்தில், கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான டெல்லி மாநகராட்சியின் நிலுவைத் தொகை ரூ.383.74 கோடியை விடுவிக்குமாறு துணைநிலை ஆளுநர் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஏற்கெனவே ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கோப்புகள் திருப்பி அனுப்பப்பட்டது, சிபிஐ ரெய்டு, கலால் துறை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு என பல்வேறு நெருக்கடிகள் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு இருந்து வரும் நிலையில் தற்போது ஆளுநரின் கடிதம் புதிய சலசலப்பை டெல்லி அரசியலில் ஏற்பட்டுள்ளது.

 நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல்

முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை வந்திருந்தது, திமுகவோடு உள்ள அக்கட்சியின் நெருக்கத்தை காட்டியது. அதேபோல பல மாநில கட்சிகளுடன் ஆம் ஆத்மி இணக்கம் காட்டி வருகிறது. இது மத்திய அரசை எதிர்க்கும் முயற்சிக்கான கூட்டணியின் உருவாக்கத்தை வெளிக்காட்டுவதாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேபோல 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி

எதிர்க்கட்சிகளின் கூட்டணி

நேற்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்திப்பு நடைபெற்றது. அதேபோல இந்த கூட்டணியில் ஆம் ஆத்மி இடம்பெறுவதை உறுதி செய்ய நிதிஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் 90 நிமிடம் பேசியுள்ளார். இது மத்திய அரசையும், அதன் அங்கமாக உள்ள டெல்லி ஆளுநரையும் கோப்பப்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+