சிஏஏ சட்டம் அமல்.. அறிவித்த உள்துறை அமைச்சகம்.. அடுத்த நொடியே.. முடங்கிய அரசு வெப்சைட்!
டெல்லி: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவிக்கை வெளியிட்டது. இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் அறிவிக்கையில் இடம் பெற்றிருப்பதால் அதை படிக்க பலரும் இணையதளத்திற்கு சென்றனர். இதனால், மத்திய அரசின் கெசட் இணையதளம் முடங்கியது.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற பரபரப்பு நாடு முழுவதும் நிலவுகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பரபரப்புக்கு நடுவே.. இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாக அறிவிப்பு ஒன்று வெளியானது.

தொலைக்காட்சியில் மோடி பேசப்போகிறார் என்று அறிவிப்பு வெளியானதுமே நாட்டு மக்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் வரிசையாக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், அதையொட்டிய அறிவிப்புகள் வரலாம் என்பது ஒருபக்கம்.. குடியுரிமை திருத்த சட்டம் பற்றிய அறிவிப்பு வரலாம் என ஒருபக்கம் என காரசாரமாக டீக்கடை முதல் டிவிட்டர் வரை விவாதம் கிளம்பியது.
சிஏஏ சட்டம் அமல்: ஆனால், 5.30 மணியளவில் அக்னி ஏவுகணை சாதனை பற்றிய அறிவிப்பை மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். மோடி அறிவிக்கப்போவதாக இருந்த அறிவிப்பு இதுதான்.. என நினைத்த மக்கள் மத்தியில் கொஞ்சம் பரபரப்பு அடங்க தொடங்கியது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான அறிவிப்பை உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளும் வெளியிடப்பட்டன.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத பிற மதத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமையை அளிக்கும் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டாலும் இந்த சட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.
மத்திய அரசின் இணையதளம் முடங்கியது: கடுமையான எதிர்ப்பும் கிளம்பியதால் சட்டத்தை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்ட மத்திய அரசு.. தேர்தல் நெருங்கும் நிலையில், அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. குடியுரிமை திருத்தம் சட்டம் தொடர்பான அறிவிக்கை வெளியானதுமே.. அரசின் அறிவிக்கைகள் வெளியிடப்படும் The Gazette of India என்ற இணையதளத்திற்கு பலரும் படையெடுத்தனர்.
இதனால், மத்திய அரசின் இந்த இணையதளம் முடங்கியது. குடியுரிமை திருத்த சட்டத்தின் அறிவிக்கை மற்றும் அதன் வழிமுறைகளை தெரிந்து கொள்ள சென்ற பலரும் இணையதளம் முடங்கியதால், ஏமாற்றம் அடைந்தனர்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications