காஷ்மீரில் அதிரடி மாற்றங்கள் செய்ய தயார்.. இன்று மத்திய அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட திட்டம்!?
ஜம்மு காஷ்மீரில் அதிரடி மாற்றங்கள் செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் அதிரடி மாற்றங்கள் செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்திற்கு பின் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது.
அங்கு வீட்டு சிறையில் வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர்கள் அரசியல் தலைவர்கள் யாரும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இதனால் இன்னும் காஷ்மீரில் சரியாக அமைதி திரும்பவில்லை.

ஜம்மு காஷ்மீர்
இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக நேற்று முக்கியமான உள்துறை ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. உளவுத்துறை அதிகாரிகள், உள்துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இன்று டெல்லி
அதேபோல் இன்று டெல்லியில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. மத்திய பாஜக அமைச்சர்கள் எல்லோரும் சேர்ந்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இதிலும் இன்று காஷ்மீர் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

வாய்ப்பு
இதனால் இன்று காலை காஷ்மீர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்கிறார்கள். காஷ்மீரில் புதிய முதலீடுகளை செய்யவும், அங்கு நலத்திட்டங்களை கொண்டு வரவும், புதிய வளர்ச்சி திட்டங்களை கொண்டு வரவும் இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறுகிறார்கள்.

முடிவு
காஷ்மீரில் மத்திய அரசு செய்ய இருக்கும் திட்டங்கள் குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு செய்யப்பட உள்ளது. அதேபோல் காஷ்மீரில் பாதுகாப்பை குறைப்பது தொடர்பான ஆலோசனையும் இன்று நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காஷ்மீர் தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட உள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications