டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்ஜெட்2020: மருத்துவர்கள் பற்றாக்குறை... மாவட்ட மருத்துவமனைகளுடன் மருத்துவ கல்லூரிகள் இணைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: மருத்துவர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட மருத்துவமனைகளுடன் மருத்துவ கல்லூரிகள் இணைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

 Govt to bring new education policy, allocates ₹99,300 cr for Education

புதிய கல்விக் கொள்கையை விரைவில் அறிவிக்கப்படும். புதிய கல்வி கொள்கை தொடர்பாக 2 லட்சம் பரிசீலனைகள் அரசுக்கு வந்துள்ளன.

நடப்பாண்டில் கல்வித்துறைக்கு ரூ99.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ3,000 கோடி திறன்மேம்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

பொறியியல் படித்து வரும் புதிய பட்டதாரிகளுக்கு ஓராண்டு காலத்துக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இன்டர்ன்ஷிப் வழங்கப்படும்.

 Govt to bring new education policy, allocates ₹99,300 cr for Education

கல்வித்துறையில் அன்னிய நேரடி முதலீடு பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகளில் பெண் குழந்தைகள் சேர்க்கை அதிகரித்துள்ளது.

தேசிய போலீஸ் பல்கலைக் கழகம், தேசிய தடவியல் பல்கலைக் கழகம் ஆகியவை அமைக்கப்படும். 100 சிறந்த தனியார் கல்வி நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் ஆன்லைன் மூலம் டிகிரி பட்டம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் உட்பட 5 இடங்களில் அருங்காட்சியகம்.. பல நாள் கோரிக்கையை நிறைவேற்றிய நிர்மலா சீதாராமன்!ஆதிச்சநல்லூர் உட்பட 5 இடங்களில் அருங்காட்சியகம்.. பல நாள் கோரிக்கையை நிறைவேற்றிய நிர்மலா சீதாராமன்!

மருத்துவர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவ கல்லூரிகள் மருத்துவமனைகளுடன் இணைக்கப்படும். இதற்காக பேராசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

English summary
Union Finance Minister Nirmala Sitharaman said that the Centre will soon announce a new education policy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X