தமிழக பாஜகவினருடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி… எம்ஜிஆர் பற்றி என்ன பேசினார்??
டெல்லி : மெகா கூட்டணியானது அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் புனிதமற்ற கூட்டணி என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக முனைப்பு காட்டி வருகின்றது. அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்தையும் பிரதமர் மோடி தொடங்கி உள்ளார்.

முதற்கட்டமாக உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் காணொலி மூலம் மாநிலவாரியாக பாஜக நிர்வாகிகளுடனும், பூத் ஏஜென்ட்டுகளுடனும், தொண்டர்களுடனும் அவர் உரையாற்றினார்.
அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிர்வாகிகளுடனான காணொலி ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து நாட்டின் தென்மாநிலங்களில் பாஜகவிற்கு பலம் சேர்க்கும் வகையில், அதிக பிரசார கூட்டங்களில் பேசும் வகையில் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் தொடர்பான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில், மத்திய சென்னை, சென்னை வடக்கு, மதுரை, திருச்சி, திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பாஜகவினருடன் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது :
பாஜக-விற்கு எதிராக இணையும் மெகா கூட்டணி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் கூட்டணி, செல்வந்தர்கள் ஒன்று சேர்ந்து தனிப்பட்ட நலன்களுக்காக அமைக்கப்படும் புனிதமற்ற கூட்டணி என்று குற்றம் சாட்டினார்.
காங்கிரசின் அராஜகத்தை வீழ்த்துவதற்காகவே மறைந்த ஆந்திரா முன்னாள் முதல் மந்திரி எம்.டி.ராமாராவ் தெலுங்கு தேசம் என்ற கட்சியை ஆரம்பித்தார். ஆனால், அக்கட்சியின் இப்போதைய தலைவர் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க துடிக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் எதேச்சதிகாரம் யாரையும் விட்டு வைத்ததில்லை. குறிப்பாக, மக்களின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றிபெற்று தமிழ்நாட்டின் முதல்வராக இருந்து எம்ஜிஆர் ஆட்சியை 1980-ம் ஆண்டு கலைத்த கட்சிதான் காங்கிரஸ் என்பதை மக்கள் உணரவேண்டும் என்று மோடி குறிப்பிட்டு பேசினார்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications