Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அம்மா மேல ஏதோ ஊத்தி.. அப்பா தீ வச்சுட்டாரு.." வரதட்சணை கேட்டு பெண் கொலை! மகன் பகீர் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி, கணவரும் மாமியாரும் சேர்ந்து இளம்பெண்ணை உயிரோடு எரித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் பரவி பகீர் கிளப்பி வருகிறது. இதற்கிடையே இக்கொடூரத்தை நேரில் பார்த்த அந்தப் பெண்ணின் மகன் இது தொடர்பாகக் கொடுத்த வாக்குமூலம் பகீர் கிளப்பியிருக்கிறது.

நமது நாட்டில் இன்னுமே கூட வரதட்சணை கேட்டு டார்ச்சர் செய்யும் கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படித் தான் திருப்பூரில் ரிதன்யா என்பவர் தற்கொலை செய்து கொண்டிருந்தார். தமிழகம் முழுக்க இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் டெல்லி என்சிஆர் நொய்டாவில் நடந்துள்ளது.

Greater Noida Dowry case Son Witnesses Mother beaten by Husband In-Laws Shocking details revealed

உயிருடன் எரித்துக் கொலை

அங்கு வரதட்சணைக் கொடுமையால் நிகி என்ற பெண் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது நிகி படிக்கட்டுகளில் நடந்து வரும் பகீர் வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

மகன் பகீர்

தனது தாய் கொல்லப்பட்டதை நிகியின் மகன் நேரில் பார்த்துள்ளான். தந்தை மற்றும் பாட்டி சேர்ந்து தனது தாயைச் சித்திரவதை செய்து, தீ வைத்ததாகச் சிறுவன் கண்ணீருடன் தெரிவித்துள்ளான். இது தொடர்பாக அந்தச் சிறுவன் கூறுகையில், "அம்மா அழுது கொண்டிருந்தார். அப்போது அவர்கள் முதலில் எதையோ ஊற்றினார்கள். பிறகு அவரை அடித்து, லைட்டர் மூலம் தீ வைத்துவிட்டார்கள்" என்று சிறுவன் கண்ணீருடன் கூறியுள்ளான். தந்தை தான் அம்மாவைக் கொன்றாரா என்று கேட்டபோது, அவன் தலையை மட்டும் ஆட்டியிருக்கிறான்.

கொல்லப்பட்ட நிகிக்கும் கிரேட்டர் நொய்டாவின் சிர்சா பகுதியைச் சேர்ந்தவர் விபின் பாட்டி என்ற நபருக்கும் திருமணம் ஆகி ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. நிகி வரதட்சணை காரணமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். நிகியின் சகோதரி காஞ்சன் என்பவருக்கும் இதே விபின் குடும்பத்தில் தான் திருமணம் நடந்திருக்கிறது. வரதட்சணையாக ரூ.36 லட்சம் கொடுக்கத் தவறியதால், தனது கண் முன்னாலேயே சகோதரி நிகி உயிருடன் எரிக்கப்பட்டதாக காஞ்சன் குற்றம் சாட்டியுள்ளார். தன்னையும் வரதட்சணை கேட்டு தனது மாமியார் தாக்கியிருப்பதாக காஞ்சன் கூறுகிறார்.

தொடர் சித்திரவதை

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கல்யாணத்தின்போது எதையும் உங்க வீட்டில் கொடுக்கவில்லை என்று சொல்லிச் சொல்லி மாமியார் சித்திரவதை செய்தார். ரூ.36 லட்சம் வரதட்சணையாகக் கொண்டு வரச் சொன்னார்கள். இதற்காக வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணி முதல் 4 மணி வரை என்னையும் தாக்கினார்கள். ஒருவருக்கு வரதட்சணை கிடைத்துவிட்டது, மற்றொருவருக்கு எப்போது கொடுப்பீர்கள் எனச் சொல்லித் தாக்கினார்கள்?

ஒரு கட்டத்தில் நீ செத்துப் போவதே நல்லது... நாங்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்வோம் என்று கூட சொன்னார்கள்" என்றார். நிகியை காப்பாற்ற முயன்றதாகவும், ஆனால் முடியவில்லை என்றும் காஞ்சன் கண்ணீருடன் கூறியிருக்கிறார். மேலும், தனது சகோதரி பட்ட துன்பத்தை அவர்களும் அனுபவிக்க வேண்டும் என்றும் காஞ்சன் கூறினார்.

பகீர் வீடியோ

இது தொடர்பாகப் பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஒரு வீடியோவில், நிகியின் கணவனும் மாமியாரும் அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து, அவரை அடிப்பது தெரிகிறது. இன்னொரு வீடியோவில் உடலில் தீ எரியும் போது அவர் படிக்கட்டுகள் வழியாக ஓடி செல்கிறார். மற்றொரு வீடியோவில், அவர் தரையில் அமர்ந்து கொண்டிருக்கிறார். அதில் உடல் முழுவதும் கடுமையான தீக்காயங்களுடன் இருப்பதும் பதிவாகியுள்ளது.

உயிரிழப்பு

நிகியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், நிகியை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர் டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

காஞ்சன் அளித்த புகாரின் பேரில், நிகியின் கணவர் விபின் பாட்டி, மைத்துனர் ரோஹித் பாட்டி, மாமியார் தயா, மாமனார் சத்வீர் ஆகியோர் மீது காஸ்னா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிகியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற குற்றவாளிகளை போலீஸ் தேடி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+