மாப்பிள்ளையை சோதிக்காதீங்கன்னு சொன்னா கேட்குறாங்களா.. மாலையுடன் பாய்ந்த மணமகன்.. டோட்டல் டேமேஜ்
டெல்லி: கல்யாண வீட்டில் மணமக்கள் தங்களுக்குள் மாலை மாற்றிக்கொள்ளும் நிகழ்ச்சியின் போது, மணமகன் செய்த செயலால் மொத்த கல்யாண வீடே ஒரு நிமிடம் அதிர்ந்து போனது.. கல்யாண வீட்டில் நடந்த சுவாரசிய நிகழ்ச்சி பற்றி இங்கே பார்க்கலாம்.
கல்யாண வீடு என்றாலே கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. சொந்த பந்தங்கள் ஒன்றுகூடி கல்யாண வீட்டையே மகிழ்ச்சியில் திளைக்க வைத்து விடுவார்கள். அதிலும் இந்தியாவில் திருமண வீட்டு கொண்டாட்டங்களை பற்றி சொல்லவே தேவையில்லை. கல்யாணத்திற்கு முதல்நாளே சொந்த பந்தங்கள் வந்து விடும்..

இரண்டு மூன்று நாட்களுக்கு கல்யாண வீடு முழுக்க திருவிழா போல களை கட்டியிருக்கும்.. திருமண வீட்டில் தாலி கட்டும் நிகழ்ச்சிக்கு முன்பே பல்வேறு சடங்குகளும் நடைபெறுவது வழக்கம்.. மருதாணி வைத்தல், மாலை மாற்றுதல் போன்ற சடங்குகள் நடத்தப்படும். அந்த வகையில், மாலை மாற்றும் நிகழ்ச்சியால் கல்யாண வீடே ஒரு நிமிடம் அல்லோலப்பட்டு போயுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோ ஒன்றும் பரவி வருகிறது. அது பற்றி பார்ப்போம்... கல்யாண வீட்டில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மணப்பெண் மாப்பிள்ளைக்கு மாலை போட்டு விட்டார். பதிலுக்கு மாப்பிள்ளை மணமகளுக்கு மாலை போடும் நிகழ்ச்சி நடைபெறும்.. பெண் வீட்டினர் விளையாட்டாக மாப்பிள்ளையை அவ்வளவு எளிதில் மாலை போட விடாமல் ஜாலியாக விளையாடுவதை கல்யாண வீடுகளில் பார்த்து இருப்போம்.
அதே தான் இந்த கல்யாண வீட்டிலும் நடந்தது. ஆனால், மணப்பெண் வீட்டினர் கொஞ்சம் எல்லை மீறி மணப்பெண்ணை அதிக உயரத்திற்கு தூக்கிவிட்டார்கள்... எப்படியாவது மாலை போட்டு தனது வீரத்தை காட்டியே ஆக வேண்டும் என்று எண்ணிய மாப்பிள்ளையோ அருகில் கிடந்த சோபாவில் ஏறி ஒரேயடியாக மாலை போட பாய்ந்துவிட்டார். மணப்பெண் மீது மாலை போட்டாலும் கூட....
மணப்பெண்ணை தூக்கி வைத்திருந்த உறவினர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார்கள்... இதனால் ஒரு நிமிடம் கல்யாண வீடு பதறிப்போனது.. ஆனாலும் யாருக்கும் பெரிதாக அடிபடவில்லை.. அதன்பிறகே மொத்த கல்யாண வீடே குலுங்கி குலுங்கி சிரித்துள்ளது.. தற்போது இந்த வீடியோ அடங்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் தங்களுக்கே உரிய பாணியில் கலாய்த்து கமெண்ட்களை பதிவிட்டு வருகிறர்கள். கல்யாண வீட்டில் இதுபோன்ற சுவாரசியங்கள் நடப்பது இது முதல் தடவை இல்லை.. சில நேரங்களில் மாலை மாற்றும் நிகழ்ச்சியினால் கல்யாண வீட்டில் சண்டையே நடைபெற்ற நிகழ்வுகளும் நடந்து இருக்கின்றன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications