சட்டவிரோத பணப்பரிவர்த்தனை.. ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனையை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லி ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு முன் வைத்த கோரிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி சட்டத்தை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. மேலும், ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்க மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.

GST Council Meeting in Tamil: TN Govt Opposes Bringing Illegal Money Transactions Under GST

ஜிஎஸ்டி கவுன்சிலின் 50ஆவது கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் ஜிஎஸ்டியை வெற்றிகரமாக செயல்படுத்தியதைக் கௌரவிக்கும் வகையில் நாடு முழுவதும் ஜிஎஸ்டி நாள் 2023 கொண்டாடப்பட்ட நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க மாநில நிதியமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர். அந்த வகையில், தமிழ்நாட்டின் நிதியமைச்சராக அண்மையில் பொறுப்பேற்ற தங்கம் தென்னரசுவும் டெல்லி சென்றுள்ளார். இந்த நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது, தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசப்படவுள்ள விஷயங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனிடையே ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் மீதான வரிவிதிப்பு, பயன்பாட்டு வாகனங்களை வரையறுத்தல் மற்றும் உள்ளீட்டு வரிக் கடன் (ITC) பதிவு மற்றும் கோருவதற்கான விதிமுறைகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மல்டிபிளக்ஸ்களில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்கள் மீதான ஜிஎஸ்டி விகிதங்கள், டினுடக்சிமாப் என்ற புற்றுநோய் மருந்தின் இறக்குமதி மீதான ஜிஎஸ்டி விலக்கு, அரிய நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சிறப்பு மருத்துவ நோக்கங்களுக்கான உணவு (FSMP) ஆகியவை குறித்தும் ஜிஎஸ்டி கவுன்சில் விவாதிக்கப்பட்டது.

மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் விற்கப்படும் உணவுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பது, எஸ்யுவி கார்களை போன்றே எம்யுவி வாகனங்களுக்கும் 22 சதவீதம் செஸ் வரி விதிப்பது, இந்திய விண்வெளித் துறையில் தனியாா் நிறுவன பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், அந்த நிறுவனங்கள் வழங்கும் செயற்கைக்கோள் ஏவுதள சேவைக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு வழங்குவது உள்ளிட்டவைகள் குறித்தும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனையை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லி ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு முன் வைத்த கோரிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாடெங்கும் சிறு வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தமிழ்நாடு எதிர்க்கிறது. புற்றுநோய்க்கான விலை உயர்ந்த மருந்துகளை வாங்க அளிக்கப்படும் வரிவிலக்கிற்கு தமிழ்நாடு அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டியின் கீழ் அமைக்கப்படும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு உறுப்பினர்களை நியமிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+