நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கடிதம்.. ஜிஎஸ்டி இணை ஆணையர் பாலமுருகன் சஸ்பெண்ட்.. மத்திய அரசு ஆக்ஷன்
டெல்லி: சென்னை ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகனை சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அண்மையில், பாலமுருகன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், கண்ணையன். ஏழை விவசாயிகளான இவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம் விவாதங்களை ஏற்படுத்தியது. விவசாயிகளின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் பாஜகவின் சேலம் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் குணசேகரன் என்பவர் தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து குணசேகரனுக்கு எதிராக இவர்கள் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கிற்கு இடையேதான் இரண்டு விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அத்துடன் சம்மனில் சாதி பெயரும் இடம் பெற்று இருந்தது. இது பெரும் சர்ச்சையான நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கையை கைவிட்டது.
குடியரசு தலைவருக்கு கடிதம்: இதனிடையே, இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாலமுருகன், குடியரசுத்தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய குடும்பத்தில் இருந்து வந்ததால், விவசாயிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று தனது கடிதத்தில் பாலமுருகன் குறிப்பிட்டு இருந்தார்.
பாலமுருகன் சஸ்பெண்ட்: அதுபோக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாலமுருகன், மணிப்பூரில் நடைபெற்ற பழங்குடியினர் பெண்களின் நிலைமை பார்க்கும்பொழுது தான் இந்தியன் என சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது என்றும் பேட்டி அளித்து இருந்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்யக்கோரி, குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பணியில் இருந்து கொண்டே ஐஆர்எஸ் பாலமுருகன் அரசை விமர்சித்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகனை சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை ஓய்வு பெற இருந்த நிலையில் பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications