மோடியின் தீபாவளி பரிசு.. சர்ரென சரியும் பொருட்களின் விலை! ஜிஎஸ்டி வரி மாற்றம் எப்போது முதல் அமல்?
டெல்லி: பிரதமர் மோடி ஏற்கனவே சொன்னபடி தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றங்களை அறிவித்துள்ளார். இந்த நிலையில் புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றத்தால் எந்தெந்த பொருட்களின் விலை குறையும், இது தொடர்பாக பொதுமக்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு இந்த கட்டுரை விளக்கம் அளிக்கிறது.
இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி (GST) குறித்து கடந்த சில மாதங்களாகவே சீரமைப்புகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி, ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின உரையில், "மக்களுக்கு தீபாவளி பரிசாக விலைகள் குறையும். அதற்காக GST விகிதங்களில் மாற்றம் செய்யப்படும்" என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற GST கவுன்சில் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் ஹேர் ஆயில், ஷாம்பு, டூத் பேஸ்ட், சோப்பு, டூத் பிரஷ், சேவிங் கிரீம் போன்ற பொருட்களுக்கு விதிக்கப்பட்ட GST விகிதம் 18% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தையில் இவற்றின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

ஜிஎஸ்டி வரி
அதன்படு, உயிர் காக்கும் மருந்துகள் மீது இனி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படாது. பேண்டேஜ் போன்ற மருத்துவ உபகரணங்களுக்கு 5% வரி வசூலிக்கப்படும். (இதுவரை இத்தகைய பொருட்களுக்கு 12% வசூலிக்கப்பட்டது) ஏசி, டிவி, கார் உள்ளிட்டவற்றுக்கு வரி 28 சதவீதத்தில் இருந்து 18% ஆக குறைப்பு, டிராக்டர், விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்பு, சாமானிய மக்களுக்கான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைப்பு, UHT பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற பொருட்கள் மீது வரி கிடையாது.
ஜிஎஸ்டி வரி குறைப்பு
மேலும், சோப்பு, ஷாம்பூ, டூத் பேஸ்ட் மீது 5% வரி மட்டுமே வசூலிக்கப்படும், விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது. 350CC இருசக்கர வாகனங்கள், சொகுசு கார்கள் மற்றும் தனியார் பயன்படுத்தும் விமானங்களுக்கு 40% ஜிஎஸ்டி வரியும், அனைத்து மோட்டார் வாகன பாகங்களுக்கும் இனி 18% வரி வசூலிக்கப்படும்.9 ஆட்டோ வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதுவரை ஆட்டோ வாகனங்களுக்கு 28% வரி வசூலிக்கப்பட்டது.
அத்தியாவசிய பொருட்கள்
நொறுக்கு தீனிகள், வெண்ணெய் போன்ற பொருட்கள் மீது தற்போது 18% வரி வசூலிக்கப்பட்ட நிலையில் இனி 12% வசூலிக்கப்படும், பான் மசாலா, சிகரெட், குட்கா, ஜர்தா, கார்பனேட்டட் குளிர்பானங்கள், சோடா போன்றவற்றுக்கு 40% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள் மீதான வரி எப்போது அமலுக்கு வரும் என்பதை முடிவு செய்ய ஜிஎஸ்டி கவுன்சில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அதிகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வரிவிதிப்பு தொடர்பாக இயல்பாக எழும் சில கேள்விகளையும், அவற்றுக்கான பதில்களையும் பார்க்கலாம்.
எப்போது அமலுக்கு வரும்?
புதிய GST விகிதங்கள் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். எனினும் சிகரெட், பீடி, புகையிலை போன்ற பொருட்களுக்கு மாற்றமில்லை.
போக்குவரத்தில் உள்ள பொருட்களுக்கு e-way bill மாற்ற வேண்டுமா?
ஏற்கனவே உருவாக்கப்பட்ட e-way bills அதன் காலவரையிலான செல்லுபடியாகவே இருக்கும். மீண்டும் உருவாக்க தேவையில்லை.
பானங்கள் (non-alcoholic beverages) மீது ஏன் 40% வரி?
ஒத்த வகை பொருட்கள் ஒரே விகிதத்தில் இருக்க வேண்டும் என்பதே காரணம். தவறான வகைப்படுத்தல், வரிச் சர்ச்சைகள் போன்றவற்றை தவிர்க்க இதை அரசு செய்துள்ளது.
ரொட்டிகளுக்கு ஏன் GST மாற்றம்?
பிரட் (bread) ஏற்கனவே GST விலக்கு பெற்றது. ஆனால் பீட்சா பிரட், ரொட்டி, பரோட்டா, பராத்தா போன்றவற்றுக்கு வெவ்வேறு GST விதிக்கப்பட்டிருந்தது. இப்போது அனைத்துக்கும் ஒரே மாதிரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கார்பனேட்டட் பானங்களுக்கு ஏன் உயர்வு?
முன்பு இதற்கு GSTக்கு மேலாக செஸ் (compensation cess) விதிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்தச் செஸ் நீக்கப்பட்டதால், மொத்த வரிச்சுமை மாறாமல் இருக்க GST விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
பன்னீருக்கு ஏன் வேறு விகிதம்?
பேக்கேஜ் செய்யப்படாத பன்னீருக்கு GST இல்லை. இப்போது லேபிள் செய்யப்பட்ட பேக்கேஜ் பன்னீருக்கே விகித மாற்றம் உள்ளது. சிறு தொழில்களில் தயாராகும் பன்னீரை ஊக்குவிப்பதே இதன் நோக்கம்.
விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கான GST என்ன?
IPL போன்ற லீக்குகளைத் தவிர, மற்ற அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளில் 500 ரூபாய்க்கு குறைவான டிக்கெட் விலை இருந்தால் GST விலக்கு தொடர்கிறது. 500 ரூபாய்க்கு மேல் இருந்தால் 18% GST விதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications