"குற்றவாளியுடன் சமரசம் செய்ய வாய்ப்பிருக்கா?" 16 வயது சிறுமி பலாத்கார வழக்கில் குஜராத் ஐகோர்ட் யோசனை
டெல்லி: பாலியல் பலாத்காரத்தால் கருவுற்ற மைனர் சிறுமி தரப்பு தொடர்ந்த வழக்கில் குற்றவாளியுடன் சமரசம் செய்ய வாய்ப்பு இருக்கிறதா என்று குஜராத் ஐகோர்ட் நீதிபதி கேட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட 16 வயது மைனர் சிறுமி கருத்தரித்தார். அந்த சிறுமி இப்போது ஏழு மாதங்கள் கர்ப்பமாக இருக்கும் நிலையில், கருவைக் கலைக்க அனுமதி கோரி சிறுமியின் தந்தை அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கைக் குஜராத் ஐகோர்ட் நீதிபதி சமீர் ஜே. டேவ் தலைமையிலான பெஞ்சு விசாரித்தது. முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சிறுமியின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்கறிஞர் சிக்கந்தர் சையத், "சிறுமியின் வயது மற்றும் மனநலம் கருத்தில் கொள்ள வேண்டும். இது சிறுமிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கருக்கலைப்பிற்கு அனுமதி தர வேண்டும்" என்று வாதிட்டார். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி, குற்றம் சாட்டப்பட்டவர் இடையே சமரசம் செய்ய வாய்ப்பு உள்ளதா என்று நீதிபதி கேட்டார்.
அதற்குப் பதிலளித்த சையத், "ஏற்கனவே இரு தரப்பையும் சமாதானம் செய்ய முயன்றேன். இருப்பினும், அவர்களிடம் இருந்து பாசிட்டிவ் பதில் இல்லை. இது மூன்று உயிர்களை (குழந்தை, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் குற்றவாளி) காப்பாற்றும்" என்று அவர் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி, தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சம்மந்தப்பட்ட குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், "அவரை ஆஜர்படுத்துங்கள்.. நான் பேசுகிறேன். அவர் சமரசம் செய்ய வாய்ப்பு இருக்கிறது என தெரிந்துகொள்கிறேன். இப்போதைக்கு இந்த வழக்கில் என்ன செய்யலாம் என்ற சாத்தியக்கூறுகளை யோசித்துக்கொண்டிருக்கிறேன். எனது மனதில் நான் என்ன யோசிக்கிறேன் என்பதை நான் சொல்லவில்லை.. ஆனால் பிறக்கும் குழந்தைக்கு உதவும் வகையில் பல திட்டங்கள் உள்ளன. அவரை ஆஜர்படுத்துங்கள் நான் பேசுகிறேன்" என்றார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியையும் நீதிமன்றத்திற்கு அழைத்து வருமாறு நீதிபதி அறிவுறுத்தினார். இந்த வழக்கு விசாரணையில் குஜராத் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த முறை விசாரணையில் நீதிபதி சொன்ன சில கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். அதற்கு பகவத்கீதையை மேற்கொள் காட்டி நீதிபதி சமீர் ஜே பதிலளித்தார்.
நீதிபதி சமீர் ஜே கூறுகையில், "பகவத்கீதையின் இரண்டாம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டதை போலவே நீதிபதிகள் இருக்க வேண்டும். பாராட்டாக இருந்தாலும் சரி விமர்சனமாக இருந்தாலும் சரி, அதை நீதிபதிகள் புறக்கணிக்க வேண்டும். பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நானும் அதுபோலவே இருக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது குஜராத் ஐகோர்ட், "நாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம்.. ஆனால் உங்கள் வீட்டில் இருக்கும் அம்மா அல்லது பாட்டியிடம் கேளுங்கள்.. அப்போதெல்லாம் (திருமணம் செய்ய) அதிகபட்ச வயதே 14-15 வயது தான்.. 17 வயதிற்கு முன்பே குழந்தை பிறந்துவிடும்.
ஆண்களுக்கு முன்பே பெண்கள் முதிர்ச்சியடைகிறார்கள். 4-5 மாதங்கள் என்பதெல்லாம் பெரிய வித்தியாசம் இல்லை. மனு ஸ்மிருதியில் இதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இதை ஒருமுறை படியுங்கள்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications