டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குஜராத், ஹிமாச்சல் 2 மாநிலங்களையும் தட்டி தூக்கும் பாஜக.. காங். நிலை ரொம்பவே பாவம்! புதிய சர்வே

Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் யார் வெல்ல வாய்ப்புள்ளது என்பது குறித்த புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

இன்னும் சில வாரங்களில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரங்களை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.

இந்த இரு மாநிலங்களிலும் இப்போது பாஜக தான் ஆட்சியில் உள்ளது. மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பாஜக தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

குஜராத் பாஜக கோட்டையா? வாய்ப்பே இல்லை.. 7 தொகுதிகளில் ஒருமுறை கூட வெற்றி பெறாத ‛‛தாமரை’’.. ஏன்? குஜராத் பாஜக கோட்டையா? வாய்ப்பே இல்லை.. 7 தொகுதிகளில் ஒருமுறை கூட வெற்றி பெறாத ‛‛தாமரை’’.. ஏன்?

 சட்டசபைத் தேர்தல்

சட்டசபைத் தேர்தல்

இமாச்சல பிரதேசத்தில் இப்போது ஜெய்ராம் தாகூர் முதல்வராக உள்ளார். அங்கு ஒரே கட்டமாக வரும் நவ.12ஆம் தேதி 68 இடங்களுக்குச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு டிச.1ஆம் தேதியும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிச.5ஆம் தேதியும் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் டிச.8இல் வெளியாகிறது.

 மீண்டும் பாஜக

மீண்டும் பாஜக

இதற்கிடையே பல்வேறு தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது. அதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவே வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்பட்டு உள்ளன. இதற்கிடையே ரிபப்ளிக் டிவி-பி மார்க் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் குஜராத்தில் மீண்டும் பாஜகவே ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்பட்டு உள்ளது.

 குஜராத்

குஜராத்

அங்கு மொத்தம் 182 இடங்கள் உள்ள நிலையில், அதில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை அதாவது 127- முதல் 140 இடங்களை பாஜக வெல்லும் என்று கூறப்பட்டு உள்ளது. அதேபோல பாஜக இந்தத் தேர்தலில் 46.2% வாக்குகளை பெறும் என்றும் கூறப்பட்டு உள்ளது. முன்னதாக கடந்த 2017 சட்டசபைத் தேர்தலில் பாஜகவால் 99 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது நினைவுகூரத்தக்கது.

 காங்கிரஸ் பாவம்

காங்கிரஸ் பாவம்

காங்கிரஸ் கட்சி முந்தைய தேர்தலைப் பெற்ற இடங்களைக் காட்டிலும் இழக்கும் எனக் கூறப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சி முந்தைய தேர்தலில் 77 இடங்களை வென்றிருந்த நிலையில், வரும் தேர்தலில் 28.4 சதவீத வாக்குகளுடன் 37-45 இடங்களை மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டு உள்ளது. முதல்முறையாகக் களமிறங்கும் ஆம் ஆத்மி கட்சி 20.6 சதவீதத்துடன் 9-21 இடங்களை வெல்லும் என்று கூறப்பட்டு உள்ளது.

 மீண்டும் பாஜக

மீண்டும் பாஜக

அதேபோல இமாச்சல பிரதேசத்திலும் மீண்டும் பாஜகவே ஆட்சிக்கு வரும் என்று இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபையில் பாஜக 37-45 இடங்களைப் பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது. மேலும், 45.2 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முந்தைய தேர்தலில் பாஜக அங்கு 44 இடங்களை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இமாச்சல பிரதேசம்

இமாச்சல பிரதேசம்

அதேபோல காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அது 22-28 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டு உள்ளது. அதேபோல அதன் வாக்கு வங்கி 40.1 சதவீதமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது. முந்தைய தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களில் வென்றிருந்தது. முதல்முறையாகக் களமிறங்கும் ஆம் ஆத்மி 5.2 சதவிகித வாக்குகளுடன் ஒரு இடத்தை பெற வாய்ப்புள்ளது. இதர கட்சிகள் 1-4 இடங்களையும் பெற வாய்ப்பு உள்ளது.

English summary
Opinion poll predicted victory for the BJP in Gujarat and Himachal Pradesh: BJP will reatin power in Gujarat and Himachal Pradesh says Republic TV survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X