என்ஜின் ஃபெயில்யருக்கு வாய்ப்பு இல்லை! குஜராத் விமான விபத்துக்கு காரணம் என்ன? தீவிரமடையும் விசாரணை
அகமதாபாத்: குஜராத்தில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கு என்ஜின் செயலிழப்பு காரணமாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதற்கான வாய்ப்பே இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்திய விமானம் 'AI 171', 8 நிமிடங்களுக்குள் விபத்தில் சிக்கியது. 242 பேரை ஏற்றிக்கொண்டு ரன்வே 23லிருந்து புறப்பட்ட இந்த விமானம், விமான நிலையத்திற்கு பக்கத்தில் உள்ள மேகனி நகர் பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது.

இதற்கு என்ஜின் ஃபெய்லியர் காரணமாக சொல்லப்பட்டு வரும் நிலையில், நிபுணர்கள் இதை மறுத்துள்ளனர். அதாவது, "விபத்தில் சிக்கிய விமானத்தில் பயன்படுத்தப்பட்டது 'GE GEnx' வகை என்ஜினாகும். வணிக விமானங்களுக்கு என பிரத்யேகமாக இந்த என்ஜின் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதன் முந்தைய மாடலை விட இது, 15% வரை எரிபொருளை சேமிக்கும். இது கார்பன் ஃபைபர் கலவையால் உருவாக்கப்பட்டிருப்பதால் எடையும் குறைவு. எனவே போயிங் 787 மற்றும் 747-8 போன்ற நவீன விமானங்களுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.
மற்ற என்ஜின்களை காட்டிலும் இது மிகுந்த நம்பகத்தன்மை கொண்டதாகும். எனவே ஃபெயிலியர் ஆவதற்கான வாய்ப்பே இல்லை. விமானியின் தவறு, பறவை மோதல், கட்டுப்பாட்டு அமைப்பு செயலிழப்பு, தொழில்நுட்ப கோளாறு போன்றவை விபத்துக்கு காரணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது" என்று கூறியுள்ளனர்.
தற்போது விமானத்திலிருந்து கருப்பு பெட்டி மீட்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் விமானிகள் பேசிய கடைசி வார்த்தைகள் என்ன? என்பது தெரிய வரும். விபத்துக்கான காரணம் குறித்து போயிங் மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று விமான போக்குவரத்து துறை அறிவித்திருக்கிறது.
விபத்தில் சிக்கிய விமானத்தில் 11 சிறுவர்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 242 பயணிகள் இருந்தனர். 230 பேரில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள். ஒருவர் கனடா நாட்டை சேர்நதவர், 7 பேர் போர்த்துக்கீசியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்த பிரதமர் நரேந்திர மோடி தனது x பதிவில் தெரிவித்திருப்பதாவது, "அகதாபாத்தில் நடந்த சோகம் அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் இதயத்தை உடைத்திருக்கிறது. இந்தச் சோகமான நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications