சண்டையிட்ட மனைவிக்கு பாடம் புகட்ட... 3 வயது மகளை சீரழித்துக் கொலை செய்ய முயற்சித்த தந்தை கைது!
குடிபோதையில் மகளை சீரழித்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி: குர்கானில் தன் சொந்த மகளையே பலாத்காரம் செய்த தந்தையைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லிக்கு அருகே குர்கான் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளைஞர் மணி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஓட்டுனரான மணிக்கு மனைவியும், மூன்று வயதிலும், ஒரு வயதிலும் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், மணி குடித்து விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனால் மனைவி அவருடன் சண்டையிட்டுள்ளார். பின்னர் தனது இளைய மகளை அழைத்துக் கொண்டு அவர் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். இதனால் மூத்த மகள் வீட்டில் தந்தையுடன் தனியாக இருந்துள்ளார்.
சண்டையிட்டதால் மனைவி மீது கடும் கோபத்தில் இருந்த கணவர், அவருக்கு பாடம் புகட்ட நினைத்துள்ளார். மதுபோதையில் தனது மகளை அவர் பலாத்காரம் செய்துள்ளார்.
மறுதினம் காலை வீட்டிற்கு திரும்பி வந்த மனைவி, கட்டிலில் இரத்தக் கரையுடன் தன் மூத்த மகள் மயக்க நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த அவர், இது பற்றி போலீசில் புகார் அளித்தார்.
மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதை உறுதி செய்தனர். தற்போது டெல்லி சாப்டார்ஜாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அச்சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தலைமறைவாக இருந்த சிறுமியின் தந்தையை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரி சாம்ஷேர் சிங் தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications