National Award: எம்.எஸ்.பாஸ்கர், ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது.. 3 விருதை தட்டி தூக்கிய 'பார்க்கிங்'
டெல்லி: டெல்லியில் 71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. தமிழில் வெளியான பார்க்கிங் திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வாகியிருந்தது. இந்த படத்தில் நடித்த எம்எஸ் பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார். படத்தின் தயாரிப்பாளர் சினிஷ், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது. அதன்படி, 3 தேசிய விருதுகளை பார்க்கிங் திரைப்படம் தட்டித் தூக்கியுள்ளது. அதேபோல, வாத்தி திரைப்படத்தில் இசையமைத்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாருக்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
சினிமா துறையில் மிகப்பெரிய விருதாக தேசிய விருது உள்ளது. மத்திய அரசு சார்பில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த நடிகர், நடிகைகள், சிறந்த கதை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைப்பட இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு உள்பட பல்வேறு பிரிவுகளில் இந்த விருது ஒவ்வொரு ஆண்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் துறையின் இணையமைச்சர் எல் முருகன் ஆகியோரிடம் ஜூரி உறுப்பினர்கள் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியலை ஆகஸ்ட் 1 ஆம் தேதி வழங்கினர். அந்த வகையில், 71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இதில் விருது வென்ற திரைப்படக் கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் தேசிய விருதுகளை வழங்கினார்.
Feature films பிரிவில் 2023ம் ஆண்டில் தமிழில் வெளியான பார்க்கிங் திரைப்படத்துக்கு மொத்தம் 3 தேசிய விருதுகள் வழங்கப்பட்டது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், சிந்துஜா, எம்எஸ் பாஸ்கர் உள்பட பலர் நடித்து இருந்தனர். பார்க்கிங் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை எம்எஸ் பாஸ்கருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார். மேலும் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பார்க்கிங்' திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.
அதேபோல, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்துக்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் குமாருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார். ஜிவி பிரகாஷ் குமார் ஏற்கனவே ஆடுகளம் திரைப்படத்துக்கு தேசிய விருது வென்றிருந்த நிலையில் இது அவரது 2வது தேசிய விருதாகும்.
மேலும், இயக்குநர் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, Non feature film பிரிவில் தமிழ் ஆவணப்படமான லிட்டில் விங்ஸ் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது வென்றுள்ளது. மேலும் 'தி டைம்லெஸ் தமிழ்நாடு' என்ற ஆங்கிலப்படத்துக்கு விருது சிறந்த கலை கலாசார படத்துக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications