அழித்தே ஆகனும்.. ஹமாஸ் என்பது நவீன கால ராவணன்.. இஸ்ரேல் தூதரை சந்தித்த கங்கனா ரனாவத் பரபர ட்வீட்
டெல்லி: இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நூர் கிலோனை சந்தித்த நடிகை கங்கனா ரனாவத், ‛‛ஹமாஸ் என்பது நவீன கால ராவணன்'' எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த 7 ம்தேதி போர் தொடங்கியது. திடீரென ஹமாஸ் தீவிரவாதிகள் 7 ஆயிரம் ஏவுகணை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். தற்போது 3 வது வாரமாக போர் நடந்து வருகிறது. இதனால் இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
அதோடு இஸ்ரேல் வடக்கு காசா பகுதியில் தரைவழி தாக்குதலை தொடங்க தீவிரமாக தயாராகி உள்ளது. முதற்கட்டமாக பல பீரங்கி வண்டிகள் வடக்கு காசாவுக்குள் நுழையும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் கடந்த 7 ம் தேதி நடந்த தாக்குதலை கண்டித்தது. அதோடு இக்கட்டான சூழலில் நாங்கள் பக்கப்பலமாக இருப்போம் என இஸ்ரேலிடம் இந்தியா தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் போனில் பேசி ஆதரவு தெரிவித்தார்.
அதேவேளையில் சுதந்திரமான பாலஸ்தீனம் நாடு அமைய வேண்டும் என்பதையும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்த பிரச்சனைக்கு இருநாடுகளும் பேசி தீர்வு காண வேண்டும். எல்லைகளை பேச்சுவார்த்தை மூலம் பிரிக்க வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தி உள்ளது. பல நாடுகளும் இந்த கோரிக்கையை தான் முன்வைத்துள்ளன.
இந்நிலையில் தான் நடிகை கங்கனா ரனாவத் தான் நடித்துள்ள ‛தேஜஸ்' திரைப்படத்துக்கான புரோமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சர்பேஷ் மேவாரா இயக்கி உள்ளார். இந்திய விமானப்படை விமானியான தேஜஸ் கில்லை அடிப்படையாக வைத்து இந்த பயம் உருவாக்கப்பட்டுள்ளது. விமானப்படையின் செயல்பாட்டை காட்டும் வகையல் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. நாளை இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
இதற்கிடையே தான் அவர் நேற்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நூர் கிலோனை சந்தித்தார். அப்போது அவர், ‛‛தீவிரவாதத்துக்கு எதிராக போராடும் இஸ்ரேல் நிச்சயம் வெற்றி பெறும்'' என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்புக்கு பிறகு அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இஸ்ரேல் தூதர் உடனான சந்திப்பு குறித்த போட்டோவை பகிர்ந்தார். அதில், ‛‛இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் நூர் கிலோனுடன் சந்திப்பு நடந்தது. இன்று உலகம் முழுவதும் குறிப்பாக இஸ்ரேலும், இந்தியாவும் தீவிரவாதத்துக்கு எதிராக போராடி வருகின்றன. நேற்று ராவண அழிப்புக்காக டெல்லி வந்ததேன். இஸ்ரேல் இன்றைய நவீன ராவணனாக உள்ள ஹமாஸ் போன்ற தீவிரவாதிகளையும் தோற்கடிக்கும்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் குறிவைக்கப்படும் விதம் இதயத்தை உலுக்குகிறது. என் இதயம் இஸ்ரேலை நோக்கி செல்கிறது. இதயத்தில் இருந்து ரத்தும் கசிகிறது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெறும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. மேலும் இஸ்ரேல் தூதருடன் எனது படம் ‛தேஜாஸ்' மற்றும் இந்தியாவின் போர் விமானம் தேஜாஸ் பற்றி விவாதித்தேன்.
இதற்கிடையே இஸ்ரேல் தூதர் நூர் கிலோன், கங்கனா ரனாவத்துக்கு நன்றி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛கங்கனா ரனாவத் திரைப்படக்குழு உடனான சந்திப்பு அழகானதாக இருந்தது. இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதற்காக அவருக்கும், பிரதமர் மோடிக்கும், மக்களுக்கும் நன்றி'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications