உலகின் முதல் விண்வெளி வீரர் 'ஹனுமான்'.. சொல்கிறார் பாஜக எம்பி! அப்போ யூரி ககாரின்?
டெல்லி: தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளி மாணவர்களிடையே பாஜக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர், உரையாடியிருந்தார். அப்போது விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் ஹனுமான் என்று கூறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் யூனியனின் விண்வெளி வீரர், யூரி ககாரின் என்பது உலகறிந்த உண்மை. ஆனால், முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், அனுமன் தான் முதல் விண்வெளி வீரர் என்று ஒரு குழு மாணவர்களிடம் குறிப்பிட்டிருக்கிறார்.

தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, இமாச்சலப் பிரதேசத்தின் உனாவில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் மாணவர்களுடன் அனுராக் உரையாற்றினார். அப்போது மாணவர்களிடம், விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்? என கேள்வி எழுப்பியிருந்தார்.
மாணவர்கள் ஒருமித்த குரலில் "நீல் ஆம்ஸ்ட்ராங்" என பதிலளித்தனர்.
அனுராக் தாக்கூர்: "எனக்குத் தெரிந்து ஹனுமான் ஜி தான் விண்வெளிக்கு சென்றார்" என கூறியிருக்கிறார்.
ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினரான தாக்கூர், தனது கூற்றுக்கான கோட்பாட்டை விளக்க தொடங்கியுள்ளார். "நாம் இன்றும் நம்மை தற்போதைய நிலையில் பார்க்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழமையான நம் பாரம்பரியம், அறிவு, கலாச்சாரம் பற்றி நாம் அறியாத வரை, ஆங்கிலேயர்கள் நமக்குக் காட்டியவாறே நாம் இருக்கிறோம். எனவே, பாடப்புத்தகங்களுக்கு அப்பால் சிந்தித்து, நமது தேசத்தையும், மரபுகளையும், அறிவையும் பார்க்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். அந்தத் திசையில் பார்த்தால், நீங்கள் நிறைய விஷயங்களைக் காண்பீர்கள்" என்று கூறியிருக்கிறார்.
இதில் சோகம் என்னவெனில் இந்த செய்தியை வெளியிட்டிருந்த என்டிடிவி செய்தி ஊடகமும் விண்வெளிக்கு சென்ற முதல் வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்று குறிப்பிட்டிருக்கிறது. அவர் நிலவில் கால் வைத்த முதல் வீரர்.
பூமியிலிருந்து விண்வெளி சுமார் 100 கி.மீ உயரத்திலிருந்து தொடங்குகிறது. இதனை 'கார்மன் கோடு' என்பார்கள். இதனை உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
1961ம் ஆண்டு சோவியத் ரஷ்யவின் வோஸ்டோக் 1 விண்கலம் மூலம் யூரி ககாரின் எனும் விண்வெளி வீரர் அதிகபட்சமாக 327 கி.மீ உயரத்திற்கு பறந்து சென்றார். 108 நிமிடங்கள் வரை அவர் விண்வெளியில் பூமியை சுற்றினார். பின்னர் பாதுகாப்பாக தரையிறங்கினார். ஆக வரலாற்று ரீதியில் முதல் விண்வெளி வீரர் சோவியத் யூனியனின் யூரி ககாரின்தான். இவரை தொடர்ந்து, நான்கு மாதங்களுக்குப் பிறகு, 1961ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வோஸ்டோக் 2 விண்கலத்தில் ஜெர்மன் டிட்டோவ் எனும் மற்றொரு சோவியத் வீரர் விண்வெளிக்கு சென்றார்.
இதன் பின்னர் 19 என மொத்தமாக அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங்குக்கு முன்னர் மொத்தம் 21 வீரர்கள் விண்வெளிக்கு பயணித்திருக்கிறார்கள். 1969ல்தான் நீல் ஆம்ஸ்ட்ராங் விண்வெளிக்கு சென்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications