வெயில் காலம்.. கொரோனா பரவாதுனு அசால்ட்டா இருக்காதீங்க.. அதுக்கு எவிடென்ஸ் இல்லை.. மத்திய அரசு
டெல்லி: இனி கோடைக் காலம் அதீத வெப்பத்தால் கொரோனா பரவல் தடுக்கப்படும் என்பதற்கான போதிய ஆதாரம் இல்லை என்பதால் மக்கள் இதை நம்பிக் கொண்டு அசட்டையாக இருந்துவிடாதீர்கள் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இது கோடைக் காலம் என்பதால் கொரோனா வைரஸ் பரவுவது தடுக்கப்படும் என வதந்தி பரவி வருகிறது. அது போல் குளிர் பிரதேசங்களிலும் பரவாது என ஒரு கூற்று உள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறுகையில் மாஸ்க்குகள், கிளவுஸ் ஆகியவற்றை இந்தியாவில் அதிகளவில் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன.

இந்தியாவில்
மே 31 ஆம் தேதி முதல் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்படும். தற்போது ஒருநாளைக்கு 55 ஆயிரம் பேருக்கு சோதனை நடத்தப்படுகிறது. நேற்று வரை 5,75, 067 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த 21 நாட்கள் லாக்டவுனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3ஆவது இடத்திற்கு செல்லவில்லை.

கொரோனா பாதிப்பு
வெயில் காலத்தில் அதிக வெப்பத்தால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் என சிலர் நம்புகிறார்கள். ஆனால் தொற்றுநோய்களுக்கு வெயில் காலம், மழைக்காலம் என்றில்லை. எப்போது வேண்டுமானாலும் பரவலாம். வெளிநாடுகளை எடுத்துக் கொண்டால் குளிர் பிரதேசங்களிலும் கொரோனா பரவியது. கடும் வெயில் காலத்திலும் கொரோனா பரவிவிட்டது.

தடுப்பூசி
தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை சமூக விலகல் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியாகும். எனவே வீட்டை விட்டு வெளியே வராதீங்க. பிசிஜி தடுப்பூசியால் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படுகிறது என கூறுகிறார்கள். ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னர் அதற்கான ஆதாரம் வேண்டுமே. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பிசிஜி தடுப்பூசி காசநோய்க்காக போடப்படுகிறது.

எதிர்ப்பு சக்தி
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அரசு விதிமுறைகளை வழங்கியுள்ளது. அதை மக்கள் பின்பற்ற வேண்டும். இதற்காக இயற்கை முறையிலான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்தியாவில் கொரோனா வெளிநாட்டு பயணங்கள், கொரோனா பாதித்தவருடனான தொடர்பில்தான் உள்ளது. எனவே இந்தியாவில் கொரோனா மூன்றாம் நிலைக்கு செல்லவில்லை என்றார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications