ஹரியானா & ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவு LIVE: ஹரியானா மக்களுக்கு மனமார்ந்த நன்றி.. பிரதமர் மோடி
டெல்லி: ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்களுக்கான தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி முழுவதுமாக முடிந்துள்ளது. ஹரியானாவில் இருக்கும் 90 தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பாஜக இந்த தேர்தலில் தனியாக 89 இடங்களில் போட்டியிட்டது. இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் 89 இடங்களில் போட்டியிட்டது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபையில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன. மூன்று கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு, காங்கிரஸ், சிபிஎம் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாஜக தனியாகவும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தனியாகவும் போட்டியிட்டன. இந்த தேர்தலை முடிவுகளை காண ஒன்இந்தியா லைவுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கவும்.
















Click it and Unblock the Notifications