ஹரியானா முதல்வர் நயாப் சிங் 16000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.. பாஜக உற்சாகம்
டெல்லி: ஹரியானாவின் முதல்வராக உள்ள பாஜகவைச் சேர்ந்த நயாப் சிங்சைனி, குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள லட்வா தொகுதியில் 1654 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பாஜக ஆளும் ஹரியானாவில் கடந்த அக்டோபர் 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடந்த இந்த தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக அங்கே ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்கியது. அதேநேரம் 10 ஆண்டுகளாக அதிகாரத்தை இழந்திருந்த காங்கிரசோ, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வேகத்தில் வேலை செய்தது.

இந்த இரு கட்சிகளை தவிர ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக்தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி, ஜே.ஜே.பி-ஆசாத் சமாஜ் கூட்டணி என பலமுனை போட்டியில் இறங்கின. எனினும் இங்கு பாஜக-காங்கிரஸ் இடையேதான் நேரடி போட்டி இருந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி தான் முன்னிலை வகித்து வந்தது. காங்கிரஸ் கட்சி 55 இடங்களிலும், பாஜக 23 இடங்களிலும், இதர கட்சிகள் 6 இடங்களிலும் முன்னிலை வகித்தன. இது எல்லாம் தபால் வாக்கு எண்ணும் வரை தான். வாக்குப்பெட்டிகளில் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் நிலைமை அடியோடு மாறியது. ஹரியானாவின் முதல்வராக உள்ள பாஜகவைச் சேர்ந்த நயாப் சிங்சைனி, குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள லட்வா தொகுதியில் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்தார்.
இறுதியாக 16 சுற்றுகள் முடிவில் ஹரியானா முதல்வர் நயாப் சிங் 16054 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளரான நயாப் சிங் 70177 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் மேவா சிங் 54123 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். சுயேட்சை வேட்பாளர் விக்ரம் ஜீத் சிங் 11191 வாக்குகள் பெற்று 3ம் இடம் பிடித்தார்.. இந்தியன் நேஷனல் லோக் தல் கட்சி கட்சி வேட்பாளர் சப்னா பர்ஜிமின 7439 வாகுகள் பெற்று 4வது இடத்தை பிடித்தார். ஹரியானா முதல்வர் நயாப் சிங் இந்த வெற்றியின் மூலம் மீண்டும் முதல்வராவது உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications