32 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பாஜக வேட்பாளர்..கலங்கும் காங்கிரஸ்.. துஷ்யந்த் சவுதாலா படுதோல்வி
டெல்லி: ஹரியானாவின் முன்னாள் துணை முதல்வரும் ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) தலைவருமான துஷ்யந்த் சிங் சவுதாலா, கடந்த முறை வென்ற உச்சன கலன் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். இந்த தொகுதியில் துஷ்யந்த் சிங் சவுதாலா 5வது இடத்திற்கு தள்ளப்பட்டு படுதோல்வியை தழுவினார். ஆனால் பாஜக வேட்பாளர் தேவந்தர் சாட்டர் பூஜ் 48968 வாக்குகள் பெற்று, காங்கிரஸ் வேட்பாளரைவிட 32 வாக்குள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
பாஜக ஆளும் ஹரியானாவில் கடந்த அக்டோபர் 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடந்த இந்த தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக அங்கே ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்கியது. அதேநேரம் 10 ஆண்டுகளாக அதிகாரத்தை இழந்திருந்த காங்கிரசோ, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வேகத்தில் வேலை செய்தது.

இந்த இரு கட்சிகளை தவிர ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக்தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி, ஜே.ஜே.பி-ஆசாத் சமாஜ் கூட்டணி என பலமுனை போட்டியில் இறங்கின. எனினும் இங்கு பாஜக-காங்கிரஸ் இடையேதான் நேரடி போட்டி இருந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன.
இதில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன் சௌதாலா 6வது இடத்திற்கு தள்ளப்பட்டு படுதோல்வியை தழுவினார் பாஜகவின் தேவேந்தர் சத்தர்புஜ் அட்ரி 48968 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் பிர்ஜேந்திர சிங் 48936 வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்தார். சுயேட்சையாக போட்டியிட்ட விஜேந்தர் 31456 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தார்.
உச்சன கலன் சட்டசபை தொகுதியை பொறுத்தவரை 2019 சட்டமன்றத் தேர்தலில், ஜேஎன்ஜேபியைச் சேர்ந்த துஷ்யந்த் சவுதாலா 47,452 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். துஷ்யந்த் சவுதாலா 58.39% வாக்குகளுடன் 92,504 வாக்குகள் பெற்றிருந்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்டு பாஜகவின் பிரேம் லதாவை 47,452 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். ஆனால் இந்த முறை டெபாசிட் கூட வாங்காமல் மிக மிக மோசமான தோல்வியை தழுவியுள்ளார். துஷ்யந்த் சவுதாலா இந்த முறை 7950 வாக்குகள் மட்டுமே பெற்று 5வது இடத்தை பிடித்தார்.












Click it and Unblock the Notifications