ஹரியானாவில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி.. பாஜக வேட்பாளருடன் இறுதிவரைதிக்திக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹரியானா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஜூலானா தொகுதியில் போட்டியிடும் மல்யுத்த வீராங்கனையான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட யோகேஷ் குமாரை 6015 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தின் 50 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத் (29) இறுதிப் போட்டிக்குச் செல்வதற்குமுன் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.வினேஷ் போகத் எப்படியும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட 100 கிராம் அதிகம் இருந்ததாக கூறி தகுதி இழப்பு செய்யப்பட்டார். இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

haryana assembly election results 2024 jammu kashmir assembly election results 2024 2024 2024

இதனிடையே தகுதி இழப்பால் மனம் உடைந்த வினேஷ் போகத் இனி போராட எனக்கு தெம்பு இலை என்று கூறி, மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக கூறி தன்னுடைய ஓய்வை அறிவித்தார். இதனிடையே அவருக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே இந்தியா திரும்பிய வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாகவும், தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. அதை உறுதி செய்யும் விதமாக வினேஷ் போகத்தும், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசியதுடன், பின்னர் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

அவருக்கு ஹரியானாவின் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியது. வினேஷ் போகத், ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் ஜுலானா தொகுதியில் போட்டியிட்டார். வாக்குபதிவு அண்மையில் நடந்து முடிந்த நிலையில வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

haryana assembly election results 2024 jammu kashmir assembly election results 2024 2024 2024

அதன்படி ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வினேஷ் போகத் முன்னிலையில் இருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார் பின்னடைவை சந்தித்தார். ஆனால் நேரம் செல்ல செல்ல நிலைமை மாறியது. இறுதியாக 15 சுற்றுகள் முடிவில் 65080 வாக்குகள் பெற்ற காங்கிரஸ் வேட்பாளரும் மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகத் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார் 59065 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

சற்று முன் வந்த நிலவரப்படி பாஜக 46 இடங்களிலும், காங்கிரஸ் 38 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகள் முன்று இடங்களில் முன்னிலை வகிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+