காரில் இருந்து பாதியில் இறங்கி சென்ற ப. சிதம்பரம்.. அதன் பின் மர்மம்.. சிபிஐக்கு கிடைத்த க்ளூ!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தற்போது எங்கே இருக்கிறார் என்று சிபிஐக்கு முக்கியமான க்ளூ ஒன்று கிடைத்து உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சிக்கி உள்ளார். இந்த வழக்கில் இன்று அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

அவரின் முன் ஜாமீன் மனுவை டெல்லி ஹைகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. அதேபோல் இன்று உச்ச நீதிமன்றமும் அவரின் முன் ஜாமீன் மனுவை விசாரிக்கவில்லை.

எப்போது

எப்போது

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்படவில்லை. இந்த மனு மீது நாளையும் விசாரணை நடக்காது. ஆக.23-ல் இந்த மனு மீது விசாரணை நடக்கும். ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பெஞ்ச் விசாரிக்கிறது.

கைது செய்ய முடிவு

கைது செய்ய முடிவு

இதனால் சிபிஐ இன்று ப. சிதம்பரத்தை கைது செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் ப. சிதம்பரம் எங்கு இருக்கிறார் என்று அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். ப. சிதம்பரம் இரண்டு மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று நேற்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இன்னும் இல்லை

இன்னும் இல்லை

ஆனால் அதற்கு இன்னும் ப. சிதம்பரம் பதில் அளிக்கவில்லை. ப. சிதம்பரம் இன்று காலை தனது காரில் டிரைவருடன் சென்று வழக்கறிஞர்களை சந்தித்துள்ளார். ஆனால் பாதி வழியில் காரில் இருந்து இறங்கியவர் வேறு காரில் எங்கேயோ சென்றுவிட்டார் என்று அவரின் டிரைவர் சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அவர் எங்கே சென்றார் தெரியவில்லை.

எப்படி

எப்படி

ப. சிதம்பரம் அங்கிருந்து கிளம்பி தன்னுடைய வழக்கறிஞர் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கி உள்ளதாக சிபிஐ சந்தேகிக்கிறது. இன்று இரவு அந்த வழக்கறிஞர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆனால் அதற்கு ப. சிதம்பரம் பெரும்பாலும் இன்று நேரில் ஆஜராகி சிபிஐயிடம் விளக்கம் அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+