"வெறுப்பு பேச்சுகள்.." பாஜக மாநிலங்களில் நிலைமை ரொம்பவே மோசம்.. தென் மாநிலத்திற்கு காத்திருந்த ஷாக்
டெல்லி: இந்தியாவில் கடந்த 2023ல் முஸ்லிம்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெறுப்பு பேச்சு நிகழ்வுகளில் மூன்றில் இரண்டு பங்கு பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்துள்ளதாக இந்தியா ஹேட் லேப் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
நமது நாட்டில் வெறுப்பு பேச்சு என்பது பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. அதிலும் குறிப்பாகத் தேர்தல் நெருங்கும் போது வெறுப்பு பேச்சு சம்பவங்கள் நாடு முழுக்க கணிசமாக அதிகரிக்கிறது.

வெறுப்பு பேச்சு: இது தொடர்பாக இந்தியா ஹேட் லேப் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2023ஆம் ஆண்டில் நாடு முழுக்க எவ்வளவு வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் நடந்துள்ளது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா முழுக்க கடந்த 2023இல் 668 வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் பதிவாகியுள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு பாஜக ஆளும் மாநிலங்களில் பதிவாகியுள்ளது.
ஒட்டுமொத்த வெறுப்பு பேச்சு நிகழ்வுகளில் 68%, அதாவது 453 நிகழ்வுகள் பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்துள்ளது. அதிலும் குறிப்பாக காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு மத்திய பாஜக அரசு வசம் இருக்கும் டெல்லியில் மட்டும் 37 வெறுப்பு பேச்சு சம்பவங்கள் நடந்துள்ளன.
எந்த மாநிலம் மோசம்: மாநில வாரியாக பார்க்கும் போது மகாராஷ்டிரா (118) மற்றும் உத்தரப் பிரதேசம் (104) மாநிலங்களில் தான் அதிகபட்ச வெறுப்பு பேச்சு சம்பவங்கள் பதிவாகி இருக்கிறது. தொடர்ந்து மத்தியப் பிரதேசம் (68) மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நாட்டில் பதிவான ஒட்டுமொத்த வெறுப்பு பேச்சுகளில் சுமார் 43% இந்த மூன்று மாநிலங்களில் மட்டும் பதிவாகி இருக்கிறது.
இந்த வெறுப்புப் பேச்சுகள் எந்த நிகழ்வுகளில் நடக்கிறது. அதை ஏற்பாடு செய்வது யார் என்பது குறித்தும் இந்தியா ஹேட் லேப் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி பார்க்கும் போது விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் ஆகியவை ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் தான் அதிக எண்ணிக்கையில் வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் நடந்துள்ளது. இந்த அமைப்புகள் ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் தான் 32%, அதாவது 216 வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் நடந்துள்ளது.
அடுத்தாக பிரவீன் தொகாடியாவின் அந்தர்ராஷ்டிரிய இந்து பரிஷத் மற்றும் ராஷ்ட்ரிய பஜ்ரங் தள் அமைப்புகளில் நிகழ்வுகளில் வெறுப்பு பேச்சு அதிகமாக இருந்துள்ளது. இதற்குப் பிறகு பாஜக ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளிலும் வெறுப்பு பேச்சு அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
யார் மோசம்: மேலும், யார் வெறுப்பு பேச்சுகளை அதிகம் பேசியுள்ளனர் என்பது குறித்த தகவல்களையும் அந்த அமைப்பு பகிர்ந்துள்ளது. அதன்படி பார்க்கும் போது தீவிர வலதுசாரி இந்து தேசியவாதியான காஜல் ஹிந்துஸ்தானி என்பவர் மட்டும் 35 நிகழ்வுகளில் வெறுப்பு பேச்சுகளைப் பேசியிருக்கிறார். அவரை தொடர்ந்து பிரவீன் தொகாடியா (32) மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த தனஞ்சய் தேசாய் (31) என்பவரும் அதிகபட்ச வெறுப்பு பேச்சுகளைப் பேசியிருக்கிறார்.
தென் மாநிலத்திற்கு ஷாக்: தென்மாநிலமான தெலுங்கானாவில் பாஜக எம்எல்ஏவாக இருக்கும். ராஜா சிங் என்பவர் இதில் 5ஆவது இடத்தில் இருக்கிறார். அவர் ஓராண்டில் மட்டும் 23 வெறுப்பு பேச்சுகளைப் பேசியிருக்கிறார். மேலும் மிகவும் ஆபத்தான வெறுப்பு பேச்சு என்று வரும் போது அதை இந்த ராஜா சிங் தான் அதிகம் பேசியிருக்கிறார். அவரது 14 பேச்சுகள் மிகவும் ஆபத்தானதாக இருப்பதாக இந்தியா ஹேட் லேப் அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்த வெறுப்பு பேச்சுகளால் நாட்டில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் ஏற்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. வரும் காலத்தில் வெறுப்பு பேச்சு என்பது நாட்டில் மிகப் பெரிய பிரச்சினையாக மாறும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications