உங்க கிட்ட ஆதார் கார்டு இருக்குதுல்ல.. அதை முடிச்சிட்டீங்களா.. இன்றே கடைசி.. மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: 100 நாள் வேலை திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. இதை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தில், கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது... இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

குளங்களை தூர்வாருவது,கால்வாய்களை பராமரிப்பது, அரசுக்கு சொந்தமான காடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது என பல்வேறு அரசு சார்ந்த பணிகளுக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். இந்த திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது.
100 நாள் வேலை திட்டம்: இந்த 100 நாள் பணியாளர்களுக்கு ஊதியமானது, 2 முறைகளில் வழங்கப்பட்டு வந்தது... ஒன்று வங்கிக் கணக்கு அடிப்படையிலும், மற்றொன்று ஆதார் கணக்கு அடிப்படையிலும், ஊதியம் வழங்கப்படுகிறது.. இதனால், வங்கிக் கணக்கின் கீழ், பணியாளர்கள் அளித்த வங்கிக்கணக்கில் பணம் நேரடியாக செலுத்தப்பட்டது.
சுற்றறிக்கை: இந்நிலையில், கடந்த ஜனவரி 30-ம் தேதியன்று, மத்திய ஊரக மேம்பாடு அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும்/யூனியன் பிரதேசங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியிருந்தது.
அதில், 2023, பிப்ரவரி 1ம் தேதி முதல், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஊதியம் பெற, ஆதார் எண்ணை கொண்டு பணம் செலுத்தும் முறைகள் (ABPS -Aadhar Based Payment System) கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்காதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாக அறிவித்திருந்தது.
இன்றே கடைசி: ஆனாலும், மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கிணங்க கால வரம்பு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது... அந்த வகையில் 31-ம் தேதி அதாவது இன்றே கடைசி தேதியாகும்.. அதனால், இன்றைக்குள் வங்கிக்கணக்கை ஆதார் எண்ணுடன் இணைத்து, இணைக்கப்பட்ட வங்கிக்கிளை அலுவலகத்துக்கு சென்று உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அப்படி செய்யாதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications