Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மண்ணெண்ணையையும் எங்களுக்கு குறைச்சிட்டீங்களா? லிஸ்ட் காட்டுங்க? கனிமொழி போட்ட போடு.. தடதடத்த டெல்லி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாட்டுக்கு தரப்பட வேண்டிய மண்ணெண்ணெயின் அளவை, மத்திய அரசு இந்த 5 ஆண்டுகளாக குறைத்திருக்கிறதா? என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியிருக்கிறார்.. அப்படியானால், இந்த 5 வருடத்தில், தமிழகத்துக்கு தரப்பட்ட மண்ணெண்ணெய் அளவு பற்றின விவரங்களை தாருங்கள் என்றும் மக்களவையில் கேள்வி எழுப்பியிருக்கிறார் கனிமொழி.

கடந்த ஏப்ரல் மாதம், தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணை ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துவிட்டது என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

Have you reduced the amount of kerosene for Tamil Nadu, DMK MP Kanimozhi question

மண்ணெண்ணெய்: அப்போது அமைச்சர் மேலும் சொன்னதாவது: "கடந்த 2021-ல் மத்திய அரசு தமிழகத்துக்கு 7536 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்தது.. பிறகு, 2022ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 4500 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டது. இப்போது 2712 கிலோ, மேலும் குறைக்கப்பட்டுள்ளது.. நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை 9000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் அளவு தேவையாக இருக்கிறது..

தமிழகத்தில் 30 லட்சம் பேருக்கு கேஸ் கனெக்‌ஷன் கிடையாது. அப்படியிருக்கும்போது மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து 2 முறை, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் செவிசாயிக்கவில்லை..

மலைப்பகுதிகளில் இன்னமும்கூட பலபேர், மண்ணெண்ணெய் வைத்துதான் வாழ்க்கை நடத்துகிறார்கள். ஆனால், மண்ணெண்ணெய் ஒதுக்கீடு என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு உயர்த்த வேண்டும்" என்று கூறியிருந்தார் அமைச்சர்.

விவரங்கள் எங்கே: இந்நிலையில், இன்றைய தினம் மக்களவையில் கனிமொழி பேசும்போது, இதே மண்ணெண்ணெய் விவகாரத்தை முன்வைத்து பேசினார்.

"தமிழ்நாட்டுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் படிப்படியாக குறைத்திருக்கிறதா? மண்ணெண்ணெய் விநியோக அளவை அதிகரிக்குமாறு தமிழகம் வைத்து வரும் கோரிக்கையை மத்திய அரசு அறிந்திருக்கிறதா? தமிழகத்தின் இந்த கோரிக்கை தொடர்பாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்னென்ன? கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு விநியோகிக்கப்பட்ட மண்ணெண்ணெயின் அளவு பற்றிய விவரங்களை தாருங்கள்" என்ற கேள்விகளை கனிமொழி எழுத்துப்பூர்வமாக எழுப்பியிருந்தார்.

லிஸ்ட் எங்கே: கனிமொழியின் இந்த கேள்விக்கு மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் டேலி பதிலளித்து பேசினார். "மத நிகழ்ச்சி, மீனவர்கள் பயன்பாட்டுக்காக மானியமற்ற விலையில் மண்ணெண்ணெயை வழங்கப்படுகிறது. கடந்த 2010-11 ம் வருடங்களிலிருந்தே பொது விநியோகத் திட்டத்தின் கீழான மண்ணெண்ணெய் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

மண்ணெண்ணெய் எரிப்பதால் ஏற்படும் மாசுபடுதலை கணக்கில் கொண்டும், சமையல் கேஸ் பயன்பாடு அதிகரித்ததாலும், மின்சார பயன்பாடு அதிகரித்ததாலும், மாநிலங்கள் பல பொது விநியோகத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்தை ஊக்குவிக்காததாலும் விநியோகம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

விநியோகம்: தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் இருந்து மண்ணெண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க கோரிக்கைகள் வந்திருக்கின்றன.. ஆனால், கோரிக்கைகள் மேற்குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு தரப்படுகிறது.

தமிழகத்துக்கு கடந்த 2018-19ம் ஆண்டில் பொது விநியோக முறையில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 776 கிலோ லிட்டரும், மானியமற்ற விலையில் 17 ஆயிரத்து 40 கிலோ லிட்டரும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

2021-22ம் நிதியாண்டில் பொது விநியோகத் திட்டத்தில் 90 ஆயிரத்து 432 கிலோ லிட்டரும், மானியமற்ற விலையில் 10 ஆயிரத்து 764 கிலோ லிட்டரும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 2022-23 நிதியாண்டில் பொது விநியோகத் திட்டத்தில் 54 ஆயிரத்து 240 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயும், மானியமற்ற விலையில் 7,536 கிலோ லிட்டரும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று பதிலளித்தார் இணை அமைச்சர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+