பல்வேறு யூகங்களை கிளப்பிய மீட்டிங்.. பிரதமர் மோடியுடன் பேசியது என்ன?.. சரத்பவார் விளக்கம்!
டெல்லி: அடுத்த ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பாஜகவை முறியடிக்கும் வகையில், அதற்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வலுவான கூட்டணி அமைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

சரத்பவார்
இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை நடத்தியதாகவும் செய்திகள் வந்தன. தான் மூன்றாவது கூட்டணி அமைப்பது குறித்து பேசவில்லை என்றும் மரியாதை நிமித்தமாக பேசியதாகவும் கூறினார்.

மோடியுடன் சந்திப்பு
இதேபோல் எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் சரத்பவாரை களமிறக்க திட்டமிட்டதாகவும் தகவல் வந்தன.இதற்கும் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார் சரத் பவார். இந்த பரபரப்புக்கு இடையில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார் சரத்பவார். ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு பல்வேறு யூகங்களை கிளப்பியது.

ட்வீட்
மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ் கட்சிகளுடன் தேசிய வாத காங்கிரசுக்கு சில பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில் அதை வைத்து செய்திகள் உலா வந்தன.இந்த நிலையில் பிரதமர் மோடியுடன் நடந்த சந்திப்பில் அரசியல் பேசவில்லை என்றும் தேசிய பிரச்சினைகள், நலன்கள் குறித்து பேசியதாகவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ட்வீட் செய்துள்ளார்.

அரசியல் வல்லுநர்கள் கருத்து
''நமது நாட்டின் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடியை சந்தித்தேன். தேசிய நலனுக்கான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம். " என்று அவர் பதிவிட்டுள்ளார். ஆனாலும் இந்த சந்திப்பில் வேறு ஏதோ அர்த்தம் உள்ளதாகவும் இது விரைவில் தெரியவரும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications