“செம கியூட்” ஒரே தட்டில் உணவு.. இவன் இந்து, நான் முஸ்லிம்! சகோதரத்துவ பாடம் எடுத்த பள்ளி சிறுவர்கள்
டெல்லி: ஒரே தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 2 பள்ளி மாணவர்கள் இவன் இந்து, நான் முஸ்லிம் என்று கூறி சிரித்து மகிழும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
பல மதங்கள், மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள், உணவு பழக்க வழக்கங்களை கொண்ட மக்கள் வாழ்ந்தாலும் இந்தியா என்ற தாரக மந்திரம் நம் அனைவரையும் ஒற்றுமையாக பிணைத்து வைத்து இருக்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட உலகின் மிகப்பெரிய நாடு என்று உலக நாடுகள் இந்தியாவை போற்றி பாராட்டி வருகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக பல்வேறு சமூக நல்லிணக்க நிகழ்வுகள் நாள்தோறும் நடந்து வருகின்றன.

மோதல்கள்
இப்படி ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் அரசியல் தூண்டுதல்கள் காரணமாக சாதி, மத மோதல்களும் பெருகி வருவது கவலையளித்து வருகிறது. பெரியவர்களுக்கு மத்தியில் இருந்த சாதிய மதவாத மோதல்கள், அண்மை காலங்களாக மாணவர்களுக்கு மத்தியிலும் பரவத் தொடங்கி இருக்கிறது.

மாணவர்கள்
சிஏஏ போராட்டத்தின்போது டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் வெடித்த மோதல், மாணவர்கள் ரோகித் வெமுலா, ஜோயல் பிரகாஷ் தற்கொலைகள், கர்நாடகாவில் ஹிஜாப் போராட்டங்களின்போது ஏற்பட்ட மோதல்கள் போன்றவை எதிர்கால தலைமுறை மீதான அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தன.

பள்ளி சிறுவர்கள்
இந்த சூழலில் நாட்டுக்கே மத நல்லிணக்க, சகோதரத்துவ பாடத்தை எடுத்திருக்கிறார்கள் 2 பள்ளி சிறுவர்கள். சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவை பதிவு செய்தது யார், எந்த மாநிலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்பன போன்ற தகவல்கள் தேடியும் நமக்கு கிடைக்கவில்லை.

ஒரே தட்டில் சாப்பாடு
மிகவும் தெளிவற்றதாக இருக்கும் அந்த வீடியோவில் வரும் இளம் பிஞ்சுக்கள் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தெளிவான ஒரு பாடத்தை சில நொடிகளில் எடுத்து இருக்கிறார்கள். அதுதான் மத நல்லிணக்கம். வைரலாகி இருக்கும் அந்த பள்ளி மாணவர்கள் இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

நெகிழ்ச்சி
அப்போது ஒருநபர் அவர்களிடம் ஏதோ கேட்க, ஒரு சிறுவன் தனது நண்பனை தொட்டு "இவன் இந்து, நான் முஸ்லிம்." என்று சொல்லி சிரிக்கிறார். அடுத்த சில நொடிகளில், "இவன் முஸ்லிம், நான் இந்து. இவன் பெயர் முனவர். நான் ஜுது" என்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு காண்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications