"ஹர் கர் தஸ்தக்" ஆரம்பமானது.. வரும் 30க்குள் 90% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி.. மத்திய அரசு அதிரடி
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது
டெல்லி: நாடு முழுதும் நவம்பர் 30க்குள், 90 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக, வீடு வீடாக தட்டுங்கள் என்ற தடுப்பூசி விழிப்புணர்வை மத்திய அரசு துவங்கி உள்ளது.
இந்தியாவில் தொற்று வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதே தவிர, மொத்தமாக நீங்கவில்லை.. அதேசமயம், தடுப்பூசிகளை செலுத்துவதிலும் நாடு மும்முரமாகி கொண்டிருக்கிறது..
இதுவரைக்கும் 110 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன... எனினும், நாட்டின் 12 மாநிலங்களின் 45 மாவட்டங்களில் ஒரு டோஸ் தடுப்பூசியை 50 சதவீதத்துக்கும் குறைவானோர் மட்டுமே போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புது இயக்கம்
இதுகுறித்து அந்த மாவட்ட கலெக்டர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, வீடு வீடாக சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.. இதற்காகவே "ஹர் கர் தஸ்தக்" அதாவது "ஒவ்வொரு வீட்டையும் தட்டுங்கள்" என்ற இயக்கத்தையும் மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது கையில் எடுத்துள்ளது.

தடுப்பூசிகள்
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதை பற்றி நேற்று முன்தினம் சொல்லும்போது, "70 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்... 38 சதவீதத்தினர் 2-வது டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். 12 கோடிக்கும் மேற்பட்டோர் 2-வது டோஸ் தடுப்பூசியை போடவில்லை. அதனால், "ஒவ்வொரு வீட்டையும் தட்டுங்கள்" என்ற இயக்கம் தொடங்கியுள்ள நிலையில், வயது வந்த அனைவரும் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

முகாம்கள்
18 வயதான தகுதி வாய்ந்தவருக்கு தடுப்பூசி போடாமல் விடுபட்டு விடக்கூடாது.. இதை நாம் உறுதி செய்ய வேண்டும்.. இதற்காகவே பஸ் ஸ்டாண்ட், ரெயில்வே ஸ்டேஷன்களில் தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும்.. நடமாடும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட வேண்டும்" என்று அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில், நேற்றைய தினம் மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலர் மனோகர், காணொலி மூலம் இதுகுறித்து பேசியதாவது:

இலக்கு
நாடு முழுதும், 18 வயதுக்கு மேற்பட்டோர், இதுவரை 80 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது... 39 சதவீதம் பேர், 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர்... நாட்டின் சராசரி தடுப்பூசி 38 சதவீதமாக இருக்கிறது.. ஆனால், இந்த சராசரி சதவீதத்தை, தமிழகம், பஞ்சாப், நாகலாந்து, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உட்பட, பல்வேறு மாநிலங்கள் எட்டவில்லை... அதனால், வரும் 30ம் தேதிக்குள் நாடு முழுதும் 18 வயதுக்கு மேற்பட்டோர், 90 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு
இதற்காக, வீடு வீடாக தட்டுங்கள் என்ற தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் துவங்கப்பட்டுள்ளது.. இந்த விழிப்புணர்வு படி வீடு வீடாக சென்று 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி உள்ளனரா, இல்லையா என்பதை ஆய்வு செய்து, தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது... இதற்கு, அனைத்து மாநிலங்களின் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தடுப்பூசி அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications