Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூப்பர்ல.. கிட்ட நெருங்கி.. கைகளை கோர்த்த "ஸ்விக்கி - சொமேட்டோ" டெலிவரி பாய்ஸ்.. தழைக்கும் மனிதநேயம்

உணவு நிறுவன ஊழியர்கள் 2 பேரின் வீடியோ இணையத்தில் ஷேர் ஆகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மனிதநேயத்தை வெளிப்படுத்தும் விதமாக, 2 உணவு நிறுவனங்களின் ஊழியர்களின் செயல்கள் இணையத்தில் காண்போர் மனதை ஈர்த்து வருகிறது.

ஹோட்டல்களில் இருந்து உணவு வாங்கி வந்து வீடுகளுக்கு, நேரடியாக டெலிவரி செய்யும் சேவையை ஸ்விக்கி நிறுவனம் செய்து வருகிறது.. இந்நிலையில், கடந்த வாரம் ஒரு வீடியோ வெளியானது.

மஹாராஷ்டிராவின் மும்பையில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது.. இதனால், சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

 கனமழை

கனமழை

அப்போது, மும்பையை சேர்ந்த ஸ்விக்கி ஊழியர் ஒருவர், கொட்டி வரும் கனமழைக்கு இடையே, முதுகில் உணவு டெலிவரி பையுடன் குதிரையில் வேகமாக செல்லும் வீடியோ வெளியானது.. வெறும் 6 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவில், ஊழியரின் முகம் தெரியவில்லை... இந்த வீடியோ, ஸ்விக்கி நிறுவனத்துக்கு விளம்பரத்தையும், நற்பெயரையும் ஏற்படுத்தியது.. அடைமழையையும் பொருட்படுத்தாது, கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்த அந்த ஊழியரை ஸ்விக்கி நிறுவனம் பாராட்ட நினைத்தது..

 குதிரை

குதிரை

அதற்காக, குதிரையில் சென்ற அந்த ஊழியர் குறித்து, தகவல் தெரிவிப்பவர்களுக்கு, 5,000 ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்றும் சோஷியல் மீடியாவில் அறிவித்தது. பிறகுதான் தெரிந்தது, அந்த நபர் ஸ்விக்கி நிறுவனத்தைச் சேர்ந்தவர் இல்லை.. குதிரையில் சென்ற நபரின் அறையில் தங்கியிருந்துள்ளார் ஸ்விக்கி ஊழியர்.. அந்த நண்பரிடம் டெலிவரி பேக்கை கடன் வாங்கிவிட்டு, திருப்பித் தராமல் இருந்ததால்தான் இப்படி ஒரு குழப்பம் வந்ததாக ஸ்விக்கி தரப்பில் விளக்கமும் தரப்பட்டது.. இந்நிலையில், இன்னொரு வீடியோ வைரலாகி உள்ளது..

 சொமேட்டோ

சொமேட்டோ

ஸ்விக்கி டெலிவரி ஊழியர் ஒருவர், உணவு டெலிவரி செய்வதற்காக, பைக்கில் சென்று கொண்டு கொண்டிருக்கிறார்.. அப்போது, சோமேட்டோ டெலிவரி மேன் ஒருவரும், உணவு டெலிவரி செய்ய தன்னுடைய சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறார்.. இருவருமே அருகருகில் பைக் ஓட்டிச் சென்று, பிறகு, கிட்ட கிட்ட நெருங்கிவிடுகின்றனர்.. ஸ்விக்கி டெலிவரி மேன், சோமேட்டோ டெலிவரி மேனின் கையில் பிடித்துக் கொண்டு வேகமாக தன்னுடன் கூட்டி செல்கிறார்.. டெல்லியின் கடும் வெயிலில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சோமேட்டோ டெலிவரி மேனுக்கு, ஸ்விக்கி ஊழியர் கைநீட்டி உதவி செய்திருப்பது பாராட்டினை பெற்றுள்ளது

 மனிதநேயம்

மனிதநேயம்

ஒன்றுக்கொன்று, சமமான போட்டி நிறுவனங்களாக இருந்தாலும், நட்பின் ஆழத்தில் அனைத்தும் காணாமலும் போய்விட்டது.. வேறு வேறு நிறுவனத்தை சேர்ந்த இருவரும் நெருங்கி கைகோர்த்து செல்லும் இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. தொழில்ரீதியாக பிரிக்கப்பட்டிருந்தாலும், இவர்களுக்குள்ளும் மனிதமும் நட்பும் சுரக்கிறது.. மனிதநேயம்தான் இந்த உலகத்திற்கு இன்றைய காலகட்டத்தில் தேவை என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+