"தெருநாயை".. வித்தியாசமாக சத்தம் போட்ட நாய்.. பதறவைக்கும் வீடியோ.. "மனித மிருகத்தை" தூக்கிய போலீஸ்
தெருநாயை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர வைத்து வரும்நிலையில், அந்நபரை போலீசார் கைது செய்துள்ளனர்
டெல்லி: கடந்த வாரம்தான் ஒரு நாய் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது. இப்போது அதேபோல இன்னொரு நாய் தலைநகரம் டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறது.. இந்த வீடியோ வெளியாகி காண்போரை பதற வைத்து வருகிறது.
கடந்த சில காலமாகவே, வாயில்லா மிருகங்களை பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது.. நாய், கன்றுக்குட்டி என்று இந்த காமுகர்கள் எதையும் விட்டு வைப்பதில்லை.
விலங்குகளை மதிக்காத போக்குதான், பாலியல் நிகழ்வுகளுக்கு காரணம் என்பதால், இதுபோன்ற கொடூர குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் ஏராளமான கோரிக்கைகளை விடுத்தபடியே உள்ளனர்.

மிருக வதை
மிருகங்களை பலாத்காரம் செய்வது இயற்கைக்கு முரணான விஷயம் என்ற போதிலும், இது தொடர்பாக கைதாகுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே வருவது வேதனையை தந்து வருகிறது.. அதிலும் வட மாநிலங்களில் இதுபோன்ற குற்றங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.. திருப்பூரில் கடந்த வருடம், பசு மாட்டை கடத்தி சென்று, பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள் இளைஞர்கள் 3 பேர்.. ஆனால், இவர்கள் 3 பேருமே வடமாநிலத்தை சேர்ந்தவர்கள்.. பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்..

சினை ஆட்டு சத்தம்
கேரளாவில் காசர்கோடு அருகே கோட்டச்சேரி பகுதியில் உள்ள ஓட்டலில் இதேபோல ஒரு சம்பவம் நடந்தது. அந்த ஓட்டலில் ஆடு ஒன்றை வளர்த்துள்ளனர்.. அது 4 மாத சினையாக இருந்துள்ளது... திடீரென ஒருநாள், வழக்கத்திற்கு மாறாக ஆடு நள்ளிரவில் சத்தம் போடுவதை கேட்டு அந்த ஓட்டல் ஊழியர்கள் எழுந்துச்சென்று பார்த்துள்ளனர். அப்போது, 3 பேரும் சேர்ந்து அந்த சினை ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததை அறிந்து அதிர்ந்துபோய் அவர்களை பிடிக்க முயன்றனர்.. 2 பேர் தப்பிவிட்ட நிலையில், ஒருவர் மட்டும் சிக்கினார்.. அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவராம்.. பெயர் செந்தில்.. இதே ஓட்டலில்தான் வேலை பார்த்து வந்துள்ளார்..

மிருக வதைகள்
இதுபோன்றவர்களை, விலங்குகள் வதை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்தாலும், மிருக வதை என்பது தொடர்ந்து ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது.. இதோ டெல்லியில் இன்னொரு கொடுமை நடந்துள்ளது.. அங்குள்ள இந்திரபுரி பகுதியில் உள்ளது ஜேஜே காலனி.. இங்குள்ள பி பிளாக்கில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார்.. இவர், தன்னுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் சதீஷ் என்பவர் மீது இந்திராபுரி போலீசில் புகார் ஒன்றை தந்துள்ளார். அந்த புகாரில், கடந்த பிப்ரவரி 28ம் தேதி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தேன்.

நாய் சத்தம்
அப்போது நாய் ஒன்று அழும் சத்தம் வித்தியாசமாக கேட்டது.. அதனால், அங்கு சென்று பார்த்தபோது, சதீஷ் அந்த நாயை பலாத்காரம் செய்து கொண்டிருந்தார். இதை நான் வீடியோ எடுத்துவிட்டேன். சதீஷ் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவரும்கூட என்று தன்னுடைய புகாரில் ராஜேஷ் கூறியிருந்தார். மேலும் அந்த வீடியோ ஆதாரத்தையும் போலீசில் ஒப்படைத்தார்.. இதையடுத்து, இந்திரபுரி போலீசார், 377 மற்றும் 11 விலங்குகள் சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.. குற்றவாளி சதீஷையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்..

பதறுதே கதறுதே
இப்படித்தான் டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு இதே போல தெருநாய் ஒன்று அடையாளம் தெரியாத நபரால் பலாத்காரம் செய்யப்பட்டது. இப்போது அதுபோலவே 2வது முறையாக இந்த சம்பவம் நடந்துள்ளது.. அதேபகுதியில் உள்ள பூங்காவில் இன்னொரு நாய் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல்கள் வலம்வந்து கிலியை தந்து கொண்டிருக்கின்றன. தெருநாயை சதீஷ் பலாத்காரம் செய்யும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி பதற வைத்து வருகின்றன.. பாலியல் இச்சைகளுக்கு ஆளாக நேரிடும்போது, சிலர் அதை எதிர்க்க துணிவில்லாதபோது, இப்படியான வக்கிரங்களை அரங்கேற்றுவதாகவும், இதில் குழந்தைகள் முதல் வாயில்லா ஜீவன்கள் பாதிக்கப்படுவதாகவும் உளவியல் காரணங்கள் சொல்லப்படுகின்றன..

ஜீவகாருண்யம்
மற்றொருபக்கம், குடும்பங்களில், பாலியல் தொடர்பான விஷயங்களை பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு பல்வேறு தடைகள் இருப்பதாலும், பாலியல் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழ்நிலைகளும் பெரும்பாலும் அமையாததாலும், இதுபோன்ற நேரங்களில் மனிதர்களின் பாலியல் உணர்வுகளுக்கு பலியாவது விலங்குகளே என்பது வருத்தத்திற்குரிய விஷயம்" என்றும் வேதனை தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள்.. எனினும், காரணங்கள் ஆயிரம் சொல்லப்பட்டாலும், எந்த ஒரு உயிரையும் துடிதுடிக்க வைக்கும் உரிமை யாருக்குமே இல்லைதானே?!!












Click it and Unblock the Notifications