அதிகரிக்கும் வெப்பம்.. டீ,காபியை குறைப்பது நல்லது.. அப்போ எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும்?
வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதனால், வெப்ப அலையில, நீர்ச்சத்து குறைவு, குமட்டல் போன்ற பாதிப்புகளும் எற்படுவது அதிகரிக்கக்கூடும்.
டெல்லி: வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதனால், வெப்ப அலையில், நீர்ச்சத்து குறைவு, குமட்டல் போன்ற பாதிப்புகளும் எற்படுவது அதிகரிக்கக்கூடும். எனவே வெயிலை சாதாரணமாக எடை போடாமல், நமது உணவுப் பழக்க வழக்கத்தில் சில மாறுதல்கள் செய்தாலே வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உதவும். அது என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே நாட்டின் பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியிருக்கிறது. தகிக்கும் வெயிலால் வெப்ப நோய்கள் தாக்கத்தொடங்கும் நிலை உள்ளது.
குறிப்பிட்டு சொல்வது என்றால் வெப்பத்தளர்ச்சி, மயக்கம், சிறுநீர்க்கடுப்பு, வயிற்றுப்போக்கு, அம்மை நோய் போன்ற நோய்கள் வெப்ப காலத்தில் ஏறடுவதுண்டு. வெப்ப நோய்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூட மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
அந்த அளவுக்கு நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. வெப்ப அலையில், நீர்ச்சத்து குறைவு, குமட்டல் போன்ற பாதிப்புகளும் எற்படுவது அதிகரிக்கும். ஏன் ஸ்ட்ரோக் கூட வரக்கூடும். எனவே வெயிலை சாதாரணமாக எடை போடக்கூடாது. நமது உணவுப் பழக்க வழக்கத்திலும் சில மாறுதல்கள் செய்தாலே வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உதவும். அது என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

நீர்ச்சத்து முக்கியம்
வெயில் காலங்களில் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வெயில் காலத்தில் தாகத்தை தணிக்கவும் நீர்ச்சத்து உடலில் நல்ல நிலையில் இருக்கவும் இது உதவும். குறைந்தபட்சம் 8- 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது வெப்ப காலத்தில் உடல் நலனை பேணுவது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். வெறும் தண்ணீராக மட்டும் குடிக்காமல் பழச்சாறுகள்,மூலிகை பானங்கள் போன்றவற்றையும் குடிக்கலாம். அதேபோல், சால்ட் டிரின்க்ஸ் என்று சொல்லப்படும் லெமன் வாட்டர், பட்டர் மில்க், லஸ்சி போன்றவற்றையும் பருகுவது நல்லது.

பழங்களை எடுத்துக்கொள்வது
வெயில் காலங்களில் ஏற்படும் நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பழங்கள் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக அதிக அளவு நீர்ச்சத்து கொண்ட பழங்களான தர்பூசணி, ஆரஞ்ச், முலாம்பழம், வெள்ளரிக்காய், எலுமிச்சை, மாம்பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இத்தகைய நீர்ச்சத்து மிக்க பழங்களை சாப்பிடுவதனால், அதீத வெப்பத்தால் ஏற்படும் உஷ்ணம் தணியும் என்றும் வெப்பத்தால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் ஏற்படும் ரிஸ்க் குறைவு என்று சுகாதார வல்லுனர்கள் கூறும் கருத்தாக உள்ளது.

எவற்றை எல்லாம் தவிர்ப்பது நல்லது
அதேவேளையில், வெப்ப காலத்தில் எந்த மாதிரியான உணவு வகைகள், பானங்களை தவிர்ப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்பதையும் இங்கே பார்க்கலாம். ஆல்கஹால், டீ, காபி, மற்றும் கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஏனெனெனில், இத்தகைய பானங்க்ளால் உடலில் நீர்ச்சத்து குறைவு, குமட்டல், வயிறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படக்கூடும். எனவே வெயில் காலத்தில் இவற்றை தவிர்ப்பது நல்லது.

அதிக புரோட்டீன் கொண்ட உணவுகள்
புரோட்டீன்கள் உடலுக்கு நல்லதுதானே இதை ஏன் இந்த பட்டியலில்கொண்டு வருகிறார்கள் என்று இது உங்களுக்கு சற்று வியப்பை அளிக்கலாம். ஆனால், இறைச்சி போன்ற அதிக புரோட்டீன் கொண்ட உணவுகள் ஜீரணம் ஆவதற்கு அதிக நேரம் ஆகும். குறிப்பாக வெயில் காலங்களில் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். எனவே அதற்கு பதிலாக தாவர உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது என்று மத்திய சுகாதார அமைச்சம் பரிந்துரைக்கிறது.

பழைய உணவுகளுக்கு நோ..
வெப்ப காலத்தில் பாக்டீரியாக்கள் வேகமாக வளரும். எனவே நாம் எதிர்பார்க்கும் நேரத்தை விட விரைவாக உணவு பொருள் கெட்டுப்போகும். எனவே, வயிறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க பழைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வெயில் காலத்தில் எந்த மாதிரியான உணவுவகைகளை சாப்பிடுவது வெப்ப பாதிப்பில் இருந்து பாதுகாக்க உதவும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரத்துள்ளது. அதேடு மட்டும் இன்றி பகல் பொழுதில் அவசியம் இன்றி வெளியில் அலைய வேண்டாம் எனவும் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சூரிய ஒளி நேரடியாக படுவதை தவிர்ப்பது நல்லது என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications