சூரிய கிரகணத்தால் சிசுவுக்கு பாதிப்பு? கர்ப்பிணிகள் என்ன செய்யலாம்? என்னென்ன செய்யக் கூடாது?
டெல்லி: இன்று முழு சூரிய கிரகணம் நிகழவுள்ள நிலையில் கர்ப்பிணிகள் என்ன செய்யலாம், என்னென்ன செய்யக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் இன்று இரவு இந்திய நேரப்படி 9.22 மணிக்கு தொடங்கி அதிகாலை 2.22 மணிக்கு முடிகிறது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. ஆனால் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் மட்டுமே தெரியும்.

இந்தியாவில் தெரியாவிட்டாலும் கிரகணங்கள் என்பது கர்ப்பிணிகளுக்கும் அவர்களின் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுவதால் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சூரிய கிரகணத்தால் கர்ப்பிணிகளுக்கு ஆபத்து என இதுவரை விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் கூட கர்ப்பிணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருத்தல் நலமாகும். சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் என்னென்ன செய்ய வேண்டும் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை பார்க்கலாம்.
சூரிய கிரகணத்தில் கர்ப்பிணிகள் செய்யக் கூடியவை
சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வீட்டிற்குள்ளேயே இருத்தல் வேண்டும். சூரிய ஒளி அவர் மீது பட்டால் குழந்தைக்கு பாதிப்பு என்பதால் உள்ளேயே இருக்க வேண்டும்.
சூரிய கிரகணத்தின் போது ஸ்கோலங்களையும் கடவுளின் நாமத்தையும் சொல்லலாம்.
சூரிய கிரகணம் முடிந்ததும் கர்ப்பிணிகள் கட்டாயம் குளித்துவிட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு சூரிய கிரகணத்தால் எந்த எதிர்மறை விளைவுகளும் ஏற்படுத்தாது.
சூரிய ஒளி புகும் ஜன்னல்கள், பால்கனிகள், கதவுகளில் தடினமான கர்டைன் துணிகளை கொண்டு மூடிவிட்டு இருட்டாக இருக்கும் அறையில் இருக்க வேண்டும்.
சூரிய கிரகணத்தின் போது நல்லதையே நினைக்க வேண்டும். நல்லதையே பேச வேண்டும்.
சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் செய்யக் கூடாதவை:
சூரிய கிரகணத்தின் போது தாயாக போகும் பெண்கள் சாப்பிடக் கூடாது.
கிரகணத்தின் போது கூர்மையான பொருட்களை பயன்படுத்த கூடாது.
கிரகணத்தின் போது நேரடியாக சூரியனையும் சூரிய கதிர்களையும் பார்க்கக் கூடாது.
யாரையும் சபிக்கக் கூடாது, கெட்ட வார்த்தைகளை பேச கூடாது, சண்டை சச்சரவுகளில் ஈடுபடக் கூடாது.
இவைதான் கர்ப்பிணிக்கு பொதுவான அறிவுரைகள் ஆகும். சூரிய கிரகணத்தின் போது மற்றவர்கள் நேரடியாக சூரியனை பார்க்கக் கூடாது. அது கண்களில் பார்வையை இழக்கும் அளவுக்கு ஆபத்து உள்ளது. எனவே அதற்கென உள்ள பிரத்யேக கண்ணாடிகளை அணிந்து கொண்டு கிரகணத்தை பார்க்கலாம். இல்லாவிட்டால் புரொஜெக்டர் கொண்டும் பார்க்கலாம்.
சூரிய கிரகணத்தின் போது சந்திரன் பூமியில் இருந்து சுமார் 2.23 லட்சம் மைல்கள் தொலைவில் காணப்படும். இதனால் சந்திரன், பூமிக்கு அருகே காணப்படுவதால் வானில் சந்திரன் பெரியதாக தெரியும். இதனால் சூரிய கிரகணத்தின் போது இருள் இருக்கும். இதற்கு முன்னர் இது போன்ற சூரிய கிரகணம் 1973 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.
இதன் பின்னர் 2150 ஆம் ஆண்டு வரை இது போன்ற ஒரு அரிய கிரகணம் நடைபெறாது என்கிறார்கள். சூரிய கிரகணம், முழு சூரிய கிரகணம், வளைய கிரகணம், பகுதி கிரகணம், முழு சூரிய கிரகணம் இணைந்த சூரிய கிரகணம் என 4 வகைகள் உள்ளன. இதில் நிலவு முழுமையாக மறைக்கும் முழு சூரிய கிரகணமே நாளை நடைபெறுகிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications