என்னாதுங்க இது மேகியோட இதை போய் கலக்குறாங்களே.. ஹுவ்வே எப்படி சாப்பிடுவது? இது ஒரு காம்போவா?
டெல்லி: என்னாது மேகியில் மாங்காய் பழ ஜூஸா என முகம் சுளிக்கும் அளவுக்கு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பொதுவாக ஒவ்வொரு உணவுக்கும் ஒவ்வொரு காம்பினேஷன் இருக்கிறது. அது அதனுடன் சேர்ந்தால்தான் நாம் விரும்பிய ருசி கிடைக்கும். இல்லாவிட்டால் எல்லாம் கெட்டுவிடும்.
ஆனால் தற்போது புதுமைகளை புகுத்துவது என்ற பெயரில் நிறைய உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. யோசித்து பார்க்க முடியாத அளவுக்கு பல வகையான காம்பினேஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

ஃபேன்டா மேகி
இதை எப்படிதான் சாப்பிடுவது என ஒரு புறம் இருந்தாலும் சாப்பிட்டுதான் பார்ப்போமே என சிலர் துணிந்து சாப்பிடுகிறார்கள். அந்த வகையில் உருவானதுதான் ஃபேன்டா மேகி. வெல்லத்தால் செய்யப்பட்ட மேகி லட்டு, மேகி மில்க் ஷேக் , மேகி ஐஸ் கிரீம் வித் ஓரியோ பிஸ்கெட் போன்றவை இணையத்தையே கலங்கடித்தன.

ஓரியோவில் பக்கோடா
அது போல் ஓரியோ பிஸ்கெட்டை கொண்டு பக்கோடா போடும் புதுமையும் நம் இந்தியாவில் நடந்தது. க்ரீம் கொண்ட சாக்லேட் பிஸ்கெட்டை கடலை மாவில் சேர்த்து அதை பக்கோடாவாக போடும் வீடியோவும் வைரலானது. அது போல் ரசகுல்லா சாட் . அதாவது ரசகுல்லாவுடன் தயிர், உலர் பழங்கள், புளிப்பு சட்னி என வித்தியாசமான சாட் ஐட்டத்தை செய்திருந்தார்கள்.

மிர்ச்சி ஐஸ்கிரீம் ரோல்
பச்சை மிளகாயை போட்டு ஐஸ்கிரீம் செய் அதற்கு மிர்ச்சி ஐஸ்கிரீம் என பெயரிட்டிருந்தனர். பட்டர் சிக்கன் பானிபூரியும் சாலையோர உணவில் முக்கிய இடம் பிடித்தன. மும்பையில் சாலையோர கடைகளில் வடா பாவ் மிகவும் விருப்பமான உணவாகும். அத்தகைய பிரபலமான வடா பாவ்வில் பிரெஞ்சு ஸ்டைலில் பாவ்வுக்கு பதில் குரோசண்ட் வைத்து விற்பனை செய்தனர்.

வீடியோ வைரல்
தற்போது ஒரு புது வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது மேகியில் மாங்காய் சேர்ப்பது, இல்லாவிட்டால் மேகியில் மாசாவை சேர்ப்பது என வீடியோ டிரென்டாகி வருகிறது. இதை பார்க்கும் போது மேகி சாப்பிடும் ஆசையே விட்டு போகும் போலயே என பலர் கமென்ட் அடிக்கிறார்கள். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications