இரு கைகளை நீட்டி.. நாக்கை துழவி.. பீட்சா கேட்கும் வேட்ஸ்வொர்த்! செம பிரில்லியண்ட்.. கலக்கல் வீடியோ!
டெல்லி: பீட்சாவுக்காக பூனை ஒன்று இரு கைகளையும் நீட்டி நாக்கை துழவி கெஞ்சி கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
வீட்டில் வளர்க்கப்படும் பூனை, நாய், கிளி உள்ளிட்டவைகளுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நேரத்தை செலவழிப்பர். அவை செய்யும் சிறிய சிறிய சேஷ்டைகளை கூட ரசிப்பதுண்டு.
இதுகுறித்து சமூகவலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. இவற்றில் பூனையும் நாயும் மனிதர்கள் என்ன உணவை உண்கிறார்களோ அதை சுவைக்க விரும்பும்.

பெரியவர்கள்
தூங்கும்போதும் சரி முழித்துக் கொண்டிருக்கும் போதும் சரி இவை செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் ரசிக்கும்படியாக இருக்கும். குழந்தைகள், பெரியவர்களுக்கு நல்ல பொழுதுபோக்கை இவை அளிக்கும். குழந்தைகளின் சேஷ்டைகளை எப்படி ரசிக்கிறார்களோ அது போல் இவற்றையும் ரசிப்பார்கள்.

பீட்சா
தற்போது ஒரு வீடியோவில் உரிமையாளர் பீட்சாவை சாப்பிடும் போது அதை அவரது வளர்ப்பு பூனை மன்றாடி கேட்கிறது. கருப்பு நிற பூனை ஒன்று அந்த பீட்சாவை பார்த்து கைகளை நீட்டி கேட்கிறது. அது போல் நாக்கை துழவி துழவி கேட்கிறது. இதை அதன் உரிமையாளர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.

பூனையின் பெயர்
இந்த வீடியோ கேட்ஸ் ஆஃப் இன்ஸ்டாகிராம் என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அந்த பூனையின் பெயர் வேட்ஸ்வொர்த். இந்த பூனையே பேசுவது போல் அந்த போஸ்ட்டில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் எல்லாருக்கும் வணக்கம், புதிதாக இந்த பக்கத்தை ஃபாலோ செய்பவர்களுக்கு நன்றி.

கெஞ்சி கேட்பது
புதியவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள சிறப்பான நேரம் இதுதான் என நான் நினைத்தேன். எனக்கு கெஞ்சி கேட்பது மிகவும் பிடிக்கும். ஜாக்ஸ், கட்லர் மற்றும் மிஸ்ட்ரி ஆகிய எனக்கு மூன்று உடன்பிறப்புகள் உள்ளனர் என அந்த போஸ்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ 1.4 மில்லியனுக்கு மேல் வியூஸ் போயுள்ளது.












Click it and Unblock the Notifications