பரபரப்பு ரிப்போர்ட்.. தடுப்பூசி போட்டும் கொரோனா.. மிரட்டும் டெல்டா வைரஸின் ஆதிக்கமும், தாக்கமும்..!
கொரோனா தொற்று குறித்த புது ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது
டெல்லி: ஒரு பரபரப்பான ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது.. அதன்படி, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குகூட, தொற்று வந்துவிடுகிறது.. அந்த வைரஸ் தொற்று பாதித்தவர்களில் டெல்டா வைரஸ் ஆதிக்கம்தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு சொல்கிறது.
நாடு முழுவதும் தொற்று பீடித்து உள்ளது.. தொடர்ந்து லாக்டவுன்கள், தளர்வுகள், கட்டுப்பாடுகள் என அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்த கொரோனாவுக்கு இதுவரை மருந்துகள், சிகிச்சைகள் எதுவுமே கண்டுபிடிக்க முடியாத நிலையில், வெறும் தடுப்பூசி மட்டுமே இப்போதைக்கு ஒரே பாதுகாப்பாக உள்ளது.

தடுப்பூசி
ஆனால், கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும், அந்த கொரோனா வைரஸ் விட்டு வைப்பதில்லை... ஒருசிலரையும் இந்த தொற்று பிடித்து கொண்டுவிடுகிறது. தடுப்பூசி போடுகிறவர்களுக்கும் கொரோனா பாதிப்பு என்பது பொதுவான ஒன்றுதான் என்பதே தற்போதைய நம் நாட்டின் இயல்பாகி கொண்டிருக்கிறது. .. ஆனால் உயிருக்கு ஆபத்து வரை செல்வதில்லை.

ஆராய்ச்சி
இந்த தொற்று குறித்தும், அதன்பாதிப்பு வீரியம், மாற்றம், தாக்கம் குறித்தும் ஆயிரக்கணக்கான டாக்டர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.. இந்த ஆராய்ச்சியின் முடிவுகளும் தினம் தினம் ஒவ்வொரு விதமாக வெளியாகி கொண்டிருக்கிறது.. அதன்படிதான் தற்போதும் ஒரு ஆய்வு முடிவு வந்துள்ளது.. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிற இன்சாகாக் ஆய்வுக்கூடமானது, இந்த கொரோனா வைரஸ் மரபணு வரிசைமுறையை ஆராய்ந்து வருகிறது.

அறிக்கை
இந்த அமைப்புதான் தன்னுடைய ஆய்வு குறித்து ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளது.. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் இதுதான்: "இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் ஏஒய் 1, ஏஒய் 2, ஏஒய்3 (டெல்டா பிளஸ்) போன்ற வைரஸ்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் உள்ளது போலவே காணப்பட்டன... அதே நேரத்தில் இவை டெல்டா வைரசை விட அதிக வளர்ச்சி தன்மையை கொண்டிருக்கவில்லை.

நோய் தன்மை
இந்தியாவில் இதுவரையில் 61 டெல்டா பிளஸ் பாதிப்புகளை கண்டறிய முடிந்துள்ளது. இப்போது இந்த வைரஸின் இனப்பெருக்க விகிதமானது 0.89 சதவீதமாக இருக்கிறது. அதாவது தொற்று பாதித்த ஒருவர், 0.89 சதவீதத்தினருக்கு மட்டுமே பரப்புகிற தன்மையை பெற்றிருக்கிறார். அதேபோல, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.. அவர்களில் அதிகம் பேருக்கு டெல்டா வைரஸ் தாக்கம்தான் அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மாதிரிகள்
இதற்காகவே, 30,230 மாதிரிகளை பிரித்தெடுத்து ஆய்வு செய்ததில் 20, 324 டெல்டா வைரஸை சேர்ந்தவை என தெரியவந்துள்ளது.. நம் நாட்டில் தொடரும் தொற்று பாதிப்புகளும் டெல்டா வைரஸை சேர்ந்தவைதான்.. இந்த வைரஸின் தீவிரத்தை குறைத்து, அதேபோல உயிரிழப்பையும் குறைத்து, காப்பதில் தடுப்பூசிதான் அதிக பயன் தரக்கூடியதாக உள்ளது.. தடுப்பூசி மட்டுமல்ல, பொது சுகாதார நடவடிக்கைகளும் இந்த வைரஸை தடுக்க பேருதவியாக இருந்து வருகின்றன..
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications