ஹிந்தி எந்த மொழிக்கும் எதிரி இல்லை.. அது நட்பு மொழி! அலுவல் மொழி பொன்விழாவில் அமித்ஷா பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ‛‛மொழி என்பது வெறும் தொடர்பு கொள்வதற்கான கருவி கிடையாது. அதுதான் தேசத்தின் ஆன்மா. இந்திய மொழிகளுக்கு ஹிந்தி எதிரி இல்லை. ஹிந்தி மொழி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நட்பு மொழியாகும். எந்த மொழிக்கும் இங்கே எதிர்ப்பு இல்லை. வெளிநாடுகளின் மொழிகளுக்கும் எதிர்ப்பு இருக்கக்கூடாது'' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

மத்திய அமைச்சகத்தின் அலுவல் மொழி துறையின் 50வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

hindi-cannot-be-the-enemy-of-any-indian-language-says-union-minister-amit-shah

இந்தியாவின் மொழிகளுக்கு ஹிந்தி எதிரி இல்லை என்று நான் உண்மையில் நம்புகிறேன். ஹிந்தி மொழி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நட்பு மொழியாகும். ஹிந்தி மற்றும் பிற இந்திய மொழிகள் இணைந்தால் நாட்டின் கலாசாரத்தின் மீதான சுயமரியாதையை அதற்கான இறுதி இலக்கை நோக்கி எடுத்து செல்ல முடியும்.

அதேபோல் எந்த மொழிக்கும் இங்கே எதிர்ப்பு இல்லை. வெளிநாடுகளின் மொழிகளுக்கும் எதிர்ப்பு இருக்க கூடாது. ஆனால் ஒருவர் தனது சொந்த மொழியை போற்றும் பண்பை கொண்டிருக்க வேண்டும். சொந்த மொழியில் பேச வேண்டும் என்பதற்கான உந்துதல் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். சொந்த மொழியில் சிந்திக்கும் திறன் இருக்க வேண்டும்.

அதேபோல் அடிமைத்தனமான மனநிலையிலிருந்து அனைவரும் விடுபட வேண்டும். ஒருவர் தனது சொந்த மொழியில் பெருமை கொள்ளும் வரை அல்லது தனது மொழியில் தன்னை வெளிப்படுத்தி கொள்ளாத வரை ஒருவரால் அடிமை மனநிலையில் இருந்து விடுபட முடியாது. ஏனென்றால் மொழி என்பது வெறும் தொடர்பு கொள்வது மட்டுமல்ல. அது தான் தேசத்தின் ஆன்மா.

இதனால் அனைத்து மாநில அரசுகளும் தங்களின் உள்ளூர் மொழிகளில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு உதவி செய்யும். அதேபோல் மருத்துவம், இன்ஜினியரிங் படிப்புகளை அனைத்து மாநிலங்களும் உள்ளூர் மொழிகளில் கற்பிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஏனென்றால் இந்திய மொழிகளை உயிருடன் வைத்திருப்பதும் அவற்றை வளப்படுத்துவதும் முக்கியம். வரும் நாட்களில் அனைத்து இந்திய மொழிகளுக்கும், குறிப்பாக அலுவல் மொழியை வளப்படுத்துவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+