"ஹிந்தி!" சுதீப்பிடம் வம்பிழுத்த அஜய் தேவ்கன்! வீதிக்கு வந்த கன்னட அமைப்பினர்! பெங்களூரில் போராட்டம்
டெல்லி: இந்தி தேசியமொழி என்ற பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடக தலைநகர் பெங்களூரில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.
'விக்ரம் ராணா' பட புரோமோஷன் விழாவில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் பேசுகையில், ‛‛இந்தி தேசிய மொழி கிடையாது. பாலிவுட் நட்சத்திரங்களும் பான் இந்தியா படங்களை தயாரிக்கிறார்கள். இந்த படங்களை தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்கிறார்கள்'' என கூறியிருந்தார்.
இதுதொடர்பான வீடியோ, செய்திகள் இணையதளத்தில் வைரலாகின. இதற்க பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் எதிர்ப்பு தெரிவித்தார்.

அஜய் தேவ்கன் டுவிட்
இதுபற்றி அஜய் தேவ்கன் இந்தி மொழியில் தனது டுவிட்டரில், ‛‛சகோதரர் கிச்சா சுதீப், இந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இங்கு டப் செய்து வெளியிடுகிறீர்கள்?. இந்தி முன்பும் இப்போதும் எப்போதும் நமது தாய்மொழியாக, தேசிய மொழியாக இருக்கும்'' என்றார்.

சுதீப் பதிலடி
இதற்கு கிச்சா சதீப், "என்னுடைய பேச்சின் பொருள் தவறாக உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன் சார். நேரில் சந்திக்கும் போது ஏன் அப்படி சொன்னேன் என்பதை உங்களுக்கு விளக்குகிறேன். புண்படுத்த வேண்டும் என்றோ விவாதம் செய்ய வேண்டும் என்றோ நான் அப்படி சொல்லவில்லை" என்றார். மேலும், இன்னொரு பதிவில், "நீங்கள் இந்தியில் அனுப்பியது எனக்கு புரிந்தது. ஏனெனில் நாங்கள் நேசித்து இந்தியை கற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால் என்னுடைய இந்த பதிலை ஒருவேளை நான் எனது தாய்மொழியான கன்னடத்தில் பதிவிட்டு இருந்தால் நிலைமை என்னவாக இருக்கும். அது உங்களால் எப்படி புரிந்து கொள்ள முடியும். நாங்களும் இந்தியாவில்தானே இருக்கிறோம் சார்?" என்று பதிலடி கொடுத்தார்.

சூடு பறக்கும் விவாதம்
இருப்பினும் இவர்கள் 2 பேருக்கும் இடையே நடந்த இந்த விவாதம் இந்தியா முழுவதும் எதிரொலிக்க துவங்கியது. இதனால் டுவிட்டரில் இந்திக்கு ஆதரவான மற்றும் எதிரான கருத்துகள் தொடர்ந்து பதிவேற்றப்பட்டது. மேலும் தேசிய மொழி இந்தியா என்பது தொடர்பான விவாதம் சூடுபிடித்தது.
அரசியல் கட்சி தலைவர்கள் முதல் நடிகர், நடிகைகள் வரை இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கன்னட அமைப்பினர் போராட்டம்
இந்நிலையி்ல பெங்களூரில் இன்று கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுப்டடனர். பெங்களூர் மைசூர் வங்கி சர்க்கிளில் திரண்ட அவர்கள் இந்தி மொழிக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் தேசிய மொழி இந்தி கிடையாது என அவர்கள் கூறிய நிலையில் நடிகர் அஜ்ய் தேவ்கனுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

கைது
இந்த போராட்டத்தின்போது நடிகர் அஜய் தேவ்கனுக்கு எதிராகவும், நடிகர் சுதீப்புக்கு ஆதரவாகவும் தொடர்ந்து கோஷமிட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக பிடித்து கைது செய்தனர். குண்டுகட்டாக தூக்கி அருகே நின்ற வேனில் ஏற்றி சென்றனர்.

கர்நாடக தலைவர்கள் சுதீப்பிற்கு ஆதரவு
இதற்கிடையே நடிகர் சுதீப்பிற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர்களான சித்தராமையா(காங்கிரஸ்), எச்டி குமாரசாமி(மதசார்பற்ற ஜனதாதளம்) உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தியாவுக்கு தேசிய மொழி என்று ஒன்றும் கிடையாது. இந்தி ஒருபோதும் தேசிய மொழியாக இல்லை. இருக்கவும் முடியாது. தொடர்ந்து இந்தியை தேசிய மொழி எனக்கூறுவது சரியாக இருக்காது என அவர்கள் கூறியுள்ளனர்.
-
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications