டாய்லட் தான் கழுவுறாங்களா.. தயாநிதி மாறன் பேச்சுக்கு ராகுல், நிதிஷ் ரியாக்சன் என்ன? பற்றவைத்த பாஜக
டெல்லி: இந்தி மொழி பேசும் நபர்கள் தமிழ்நாட்டில் வந்து டாய்லெட் சுத்தம் செய்து வருவதாக திமுக எம்பி தயாநிதி மாறன் பேசிய வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தான் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள ராகுல் காந்தி, நிதிஷ் குமார் ஆகியோரின் ரியாக்சன் என்ன? என்பது தொடர்பாக பாஜக கேள்வி எழுப்பி சாடியுள்ளது.
தமிழகத்தில் ஏராளாமன வடதொழிலாளர்கள் வந்து பணி செய்து வருகின்றனர். கட்டடம் கட்டுதல், ஓட்டல், பண்ணை, தொழிற்சாலைகளில் வடமாநில தொழிலாளர்கள் வந்து வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் வடமாநில தொழிலாளர்கள் குறித்து திமுகவின் மூத்த தலைவரும், எம்பியுமான தயாநிதி மாறன் சர்ச்சையாக பேசியுள்ளார்.
தயாநிதி மாறன் மேடை ஒன்றில் ‛‛இந்தி பேசும் நபர்கள் தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகள், சாலைகள், கழிவறைகளை சுத்தம் செய்வதில் தான் ஈடுபடுகிறார்கள். ஆங்கிலம் தெரிந்ததால் தான் நமது இளைஞர்கள் படித்துவிட்டு ஐடி நிறுவனங்களில் கை நிறைய சம்பளம் வாங்குகிறார்கள். இந்தி இந்தி என்கிறார்களே.. அவர்கள் நிலையைப் பாருங்கள்.
இன்று கட்டிடம் கட்டுபவர்கள் எல்லாம் யார்? உத்த பிரதேசம், பீகார் மாநிலங்களில் இந்தி மட்டும் படிப்பவர்கள் தான் இப்போது தமிழ்நாட்டிற்கு வந்து தமிழை கற்று இங்கேயே வீடு கட்டி தங்குகிறான். சாலையைச் சுத்தம் செய்கிறான். டாய்லெட் கழுவுகிறார்கள். இதுதான் இந்தி படித்தவர்களின் நிலை'' என தெரிவித்துள்ளார்.
தயாநிதி மாறன் இதற்கு முன்பு இப்படி பேசிய வீடியோ தற்போது வெளியாகி வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ‛‛இந்தியா'' கூட்டணியில் உள்ள லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தயாநிதி மாறன் இப்படி பேசியதை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் தயாநிதி மாறன் பேசும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பாஜகவின் ஐடிவிங்க் பொறுப்பாளர் அமித் மாளவியா பதிவிட்டுள்ளார். அதோடு தயாநிதி மாறன் பேச்சுக்கு ‛இந்தியா' கூட்டணியில் உள்ள காங்கிரஸ் க்டசியின் ராகுல் காந்தி மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ரியாக்சன் என்ன? என்பது பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அமித் மாளவியான தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛உத்தர பிரதேசம், பீகாரில் இருந்து ஹிந்தி பேசும் மக்கள் தமிழகத்தில் கழிவறைகளை சுத்தம் செய்கின்றனர் என ‛இந்தியா' கூட்டணியின் தலைவரும், திமுக எம்பியுமான தயாநிதி மாறன் பேசியுள்ளார். இந்த விஷயத்தில் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி ராகுல காந்தியும், நிதிஷ் குமாரும் தெளிவுப்படுத்த வேண்டும். ‛இந்தியா' கூட்டணி என்பது பிளவுப்படுத்தும் செயல் தற்போது முழுமையாக வெளிவந்துள்ளது'' என விளாசியுள்ளார்.
வடமாநிலத்தவர்கள் குறித்து திமுகவினர் கூறும் கருத்துகள் சமீபகாலமாக அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி திமுக எம்பி "இந்தி பேசும் கோமூத்தி மாநிலங்களில் மட்டுமே பாஜக வெற்றி வென்றுள்ளது. தென் மாநிலங்களில் பாஜகவால் நுழைய முடியாது'' என பேசியது சர்ச்சையை கிளப்பியது. தற்போது திமுக எம்பி தயாநிதி மாறனின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ விவாதத்தை கிளப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications