டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன 8ம் வகுப்பு வரை இந்தி கட்டாயமா? மத்திய அரசு விளக்கம்!

8ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: 8ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் அந்த பரபரப்பான செய்தி வெளியானது. மத்திய அரசு நாடு முழுக்க இந்தியை கட்டாய பாடமாக அறிவிக்க போவதாக செய்திகள் வெளியானது. 8ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்று அறிவிக்க போவதாக தகவல்கள் வெளியானது.

இந்த செய்தி தமிழகத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கல்வியாளர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்தி தெரியாதா.. தமிழக மாணவரை அவமதித்த விமான நிலைய அதிகாரி இந்தி தெரியாதா.. தமிழக மாணவரை அவமதித்த விமான நிலைய அதிகாரி

இந்தி ஆய்வு

இந்தி ஆய்வு

இந்தியை கட்டாயம் ஆக்குவதற்காக மத்திய குழு புதிய பரிந்துரையை செய்துள்ளதாகவும், அடுத்த நாடளுமன்ற கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும், மத்திய அரசு இதற்கான செயல்திட்டங்களை வகுத்து வருவதாகவும் தகவல்கள் வந்தது.

பெரிய பரபரப்பு

பெரிய பரபரப்பு

இந்த செய்தி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மீண்டும் இந்தி திணிப்பு செய்யப்படுகிறதா என்று அதிர்வை ஏற்படுத்தியது. இந்த முறை தமிழகம் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் இந்தி திணிப்பிற்கு எதிராக குரல்கள் எழ தொடங்கியது.

மறுப்பு தெரிவித்தார்

மறுப்பு தெரிவித்தார்

இந்த நிலையில் மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியை திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று கூறியுள்ளது. பட திட்டத்தில் இந்தியை கொண்டு வர மத்திய பாஜக அரசு முயற்சி செய்யவில்லை என்று இந்த செய்திக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மறுப்பு தெரிவித்தார்

மறுப்பு தெரிவித்தார்

இந்த நிலையில் மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியை திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று கூறியுள்ளது. பட திட்டத்தில் இந்தியை கொண்டு வர மத்திய பாஜக அரசு முயற்சி செய்யவில்லை என்று இந்த செய்திக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

என்ன சொல்கிறார்

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேக்கர் தனது டிவிட்டில் ''8ம் வகுப்பு வரை எந்த மொழிப்பாடமும் கட்டாயம் என்று புதிய கல்வி கொள்கையில் குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பாக வெளியான செய்திகள், தகவல்கள் அனைத்தும் முழுக்க முழுக்க தவறானது'' என்று கூறியுள்ளார்.

English summary
Hindi won't be compulsory in Schools clarifies Central Government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X