"72 மணி நேரம் டைம்.." ஒழுங்கா பாகிஸ்தான் போய்விடு! எச்சரிக்கும் இந்து அமைப்பு! என்ன மேட்டர் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இளம்பெண் ஒருவரை எச்சரித்துள்ள வலதுசாரி அமைப்பான கவுரக்ஷா இந்து தளம், அவர் அடுத்த 72 மணி நேரத்தில் பாகிஸ்தான் நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

காதல் ஒருவரை எந்த எல்லைக்கும் தள்ளும் என பொதுவாகச் சொல்வார்கள். இங்கே பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சீமா ஹைதர் என்ற இளம்பெண்ணை அதைக் காதல் தான் எல்லை தாண்ட வைத்துள்ளது.

27 வயதான சீமா ஹைதர் பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் கராச்சியில் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே குலாம் ஹைதர் என்பவருடன் திருமணம் நடந்து குழந்தைகளும் இருக்கிறதாம்.

 Hindu group warned Pakistan lady Seema Haider to leave the nation in 72 hours

இளம்பெண்: பாகிஸ்தானில் வசித்து வந்த இந்தப் பெண் கொரோனா காலத்தில் பப்ஜி கேம் விளையாட ஆரம்பித்துள்ளார்.. இதில் அவருக்கு உத்தரப் பிரதேச நொய்டாவை சேர்ந்த சச்சின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் மிக விரைவிலேயே காதலாக மாறிவிட்டது. இதையடுத்து பப்ஜியில் இருந்து அப்படியே சமூக வலைத்தளங்களுக்கு ஜம்ப் ஆகி, அதில் இருவரும் தங்கள் காதலைத் தொடர்ந்துள்ளனர்.

இடையில் இருவரும் நேபாளத்தில் சந்தித்துள்ளனர். அப்போது தான் குலாம் ஹைதரை விட்டுவிட்டு சச்சினுடன் சேர்ந்து வாழ சீமா முடிவு செய்தார். இதையடுத்து பாகிஸ்தானில் தனக்குச் சொந்தமான நிலத்தை விற்பனை செய்த அவர் நேபாளம் வந்து அங்கிருந்து இந்தியாவுக்குள் வந்துள்ளார். மேலும், சச்சினும் சீமாவும் இணைந்து நேபாளத்தில் ஒன்றாகவும் வாழ ஆரம்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலதுசாரி அமைப்பு: இருப்பினும், தனக்குப் பாகிஸ்தானுக்குத் திரும்ப விருப்பமில்லை என்றும் சச்சினின் உடனேயே இணைந்து வாழ விரும்புவதாகவும் சீமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பல பேட்டிகள் இணையத்தில் டிரெண்டானது. இதற்கிடையே இந்தியக் காதலனுடன் நாட்டிற்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண்ணை உடனடியாக நாடு கடத்தாவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என வலதுசாரி அமைப்பான கவுரக்ஷா இந்து தளம் எச்சரித்துள்ளது.

இதற்காக அவர்கள் 72 மணி நேரக் கெடுவும் விதித்துள்ளனர். சீமா ஹைதர் பாகிஸ்தான் உளவாளியாகவும், நாட்டுக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கலாம் என்று அந்த அமைப்பின் தேசிய தலைவர் வேத் நாகர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "துரோகம் செய்யும் நாட்டில் இருந்து வந்த ஒரு பெண்ணை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். 72 மணி நேரத்தில் சீமா ஹைதர் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றால், நாங்கள் போராட்டத்தைத் தொடங்குவோம்" என்று அவர் எச்சரித்துள்ளார்.

சீமா: உரிய விசா இல்லாமல் வசித்ததாக சச்சின்- சீமா ஜோடியை கடந்த ஜூலை 4ஆம் தேதி போலீசார் கைது செய்திருந்தனர். இருப்பினும், சில நாட்களில் அவருக்கு போலீசார் பிணை அளித்துவிட்டனர். தனக்கு இந்தியா மிகவும் பிடித்து இருப்பதாகவும் இங்கேயே இருக்க விரும்புவதாகவும் சீமா தொடர்ந்து கூறி வருகிறார்.

சமீபத்தில் அவர் இந்தி செய்தி ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "என்னை உளவாளி என்று எல்லாம் கூறுகிறார்கள்.. ஆனால் அதில் உண்மை எல்லாம் இல்லை. உண்மை எப்படியும் அனைவருக்கும் கொஞ்சக் காலத்தில் தெரிய வரும். அப்படியே நான் உளவாளியாக இருந்திருந்தால் நான் தனியாகவே இந்தியாவுக்கு வந்திருப்பேன்.. எனது குழந்தைகளை எல்லாம் கூட்டிக் கொண்டு வந்திருக்க மாட்டேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+