ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது கொடுத்தே ஆகணும்.. டெல்லியில் இந்து அமைப்பினர் போராட்டம்
டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஒரு தேசத்துரோகி. அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் குரல்எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் ஞானேஷ் குமாருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று டெல்லியில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி இருப்பது கவனம் பெற்றுள்ளது.

இந்த போராட்டம் டெல்லியில் உள்ள பிர்லா மந்திரில் இன்று நடந்தது. இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியது ஜெய் பகவான் கோயல். இவர தலைமையில் பல்வேறு இந்து அமைப்பினர் பங்கேற்றனர்.
இவர்கள் ஊர்வலமாக பிர்லா மந்திருக்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேளையில் அவர்கள் ந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.
அதோடு இந்தியாவின் மிகவும் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது ஞானேஷ் குமாருக்கு வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், ''இந்தியாவில் 'SIR' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர நடவடிக்கை மூலம் வாக்காளர் பட்டியல் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து வங்கதேசத்தினரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இரண்டு வாக்குரிமை வைத்திருந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தேர்தல் நேர்மையாக நடத்த இத்தகைய நடவடிக்கை தேவையானதாக உள்ளது. இதனால் இந்த பணியை மேற்கொண்ட இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்க வேண்டும்'' என்று கூறினர்.


Click it and Unblock the Notifications
