"கண்ட இடத்தில் கை வைத்து.." ஹோலியின் போது அத்துமீறல்? பரவும் சில பழைய வீடியோ! எது உண்மை? எது பழசு
ஹோலி கொண்டாட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அத்துமீறல் என்று புகார் எழுந்துள்ளது.
டெல்லி: ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடம் சிலர் அத்துமீறியதாக பல்வேறு வீடியோக்கள் வேகமாகப் பரவி வந்தன. இதில் சில பழைய வீடியோக்களும் இணையத்தில் வேகமாகப் பரவியுள்ளன.
இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக ஹோலி இருக்கிறது.. தென் இந்தியாவில் பெரியளவில் ஹோலி கொண்டாட்டங்கள் இருக்காது. அதேநேரம் வட இந்தியாவில் ஹோலி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
அதன்படி இந்தாண்டு ஹோலி பண்டிகை கடந்த சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வண்ணங்களின் திருவிழாவான ஹோலியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடினர்.

ஹோலி கொண்டாட்டம்
அதேநேரம் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பெண்கள் மீது அத்துமீறும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்துள்ளன. அப்படியொரு சம்பவத்தின் வீடியோ தான் இணையத்தில் வேகமாகப் பரவியது. அதில் இந்தியா வந்திருந்த வெளிநாட்டுச் சுற்றுலா பயணியிடம் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் சிலர் அத்துமீறியுள்ளனர். இது குறித்து இணையத்தில் பல்வேறு வீடியோக்கள் வேகமாகப் பரவி வந்தன. இதில் சில பழைய வீடியோக்களும் இணையத்தில் வேகமாகப் பரவின.

பழைய வீடியோ
இதற்கிடையே ஆல்ட் நியூஸ் நிறுவனத்தின் முகமது சுபைர் சில முக்கிய தகவல்களை ட்வீட் செய்துள்ளார். அதாவது இணையத்தில் கடந்த சில நாட்களாக டிரெண்டான வீடியோ இப்போது நடந்தே இல்லை.. அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியே அன்டர் தி சேம் ஸ்கை என்ற தனது யூடியூப் சேனலில் இதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டுள்ளார். அந்த படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும், சிலரும் இப்போது இணையத்தில் டிரெண்டாகும் அந்த வீடியோவை இரு ஆண்டுகளுக்கு முன்பே பகிர்ந்துள்ளனர்.

6 ஆண்டுகள்
அதேபோல டெல்லி பஹர்கஞ்ச்சில் ஹோலி கொண்டாட்டத்தில் அத்துமீறல் என்று மற்றொரு வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதை யூடியூபில் சிலர் 6 ஆண்டுகளுக்கு முன்பே பகிர்ந்துள்ளனர். இதையெல்லாம் ஸ்கீரீன்ஷார்ட்டுகளுடன் அவர் விளக்கமாகப் பதிவிட்டுள்ளார். அதேநேரம் இப்போது டிரெண்டான அனைத்து வீடியோக்களும் பழைய வீடியோக்கள் என்று சொல்ல முடியாது. டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பான் சுற்றுலாப் பயணியைச் சூழ்ந்த கும்பல் அவரிடம் அத்துமீறித் தாக்கியுள்ளனர். இது இப்போது நடந்த சம்பவம் தான்.

ஜப்பான் பெண்
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா வந்த வெளிநாட்டுப் பயணி ஒருவரிடம் இவர்கள் நடந்து கொண்ட விதம் சரியில்லை என்று பலரும் கண்டித்தனர். மேலும், சம்மந்தப்பட்டவர்களைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இணையத்தில் பரபரப்பைக் கிளப்பிய அந்த வீடியோவில், அந்க பெண்ணை சூழும் கும்பல், அவரை சூழ்ந்து பிடிக்கிறார்கள். மேலும், அவர் மீது வண்ணங்களையும் பூசுகின்றனர்.

ஒரே அறை
அப்போது பின்னால் இருந்து வரும் ஒரு சிறுவன், அவர் தலையில் முட்டையை உடைப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது அந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ள "பை, பை" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப முயல்கிறார். இருப்பினும், அந்த கும்பல் அவரை விடவில்லை.. தொடர்ந்து சுற்றிப் பிடித்தனர். இதில் ஒரு கட்டத்தில் கடுப்பான அந்த ஜப்பான் பெண், கடைசியாக ஒருவரை ஆவேசமாக அறைந்தார். அதன் பின்னரே அந்த பெண்ணை அங்கிருந்து கிளம்ப விட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

கைது
இதையடுத்து போலீசார் விசாரணையில் இறங்கினர். வீடியோவை வைத்துப் பார்க்கும் போது, அது டெல்லியில் பஹர்கஞ்ச் பகுதியில் நடந்ததாக தெரிவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விவகாரத்தில் ஒரு சிறுவன் உட்பட மூன்று பேரைக் கைது செய்தனர். அதேநேரம் இந்தச் சம்பவம் குறித்து ஜப்பான் சுற்றுலாப் பயணி எவ்வித புகாரும் தரவில்லை என்று போலீசார் கூறுகின்றனர். மேலும், அவர் ஏற்கனவே இந்தியாவில் இருந்து கிளம்பி வங்கதேசம் சென்றுவிட்டார்.
-
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications