குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவுடன் அமித்ஷா திடீர் சந்திப்பு
டெல்லி: குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் நாளை சந்திக்க திட்டமிட்டுள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியுள்ளார்.
குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சந்தித்து பேசினார். குடியரசுத்தலைவர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மரியாதை நிமித்தமாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசியதாக ராஷ்டிரபதி பவன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் நாளை குடியரசுத்தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் குடியரசுத்தலைவரிடம் மனு அளிக்க உள்ளன. மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறாதது குறித்து முறையிடவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முன்னதாக மணிப்பூருக்கு, ‛‛இந்தியா'' கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் எம்பிக்கள் நேரடியாகவே சென்றனர்.
மணிப்பூருக்கு 2 நாள் பயணமாக 21 பேர் கொண்ட எம்.பிக்கள் குழு டெல்லியில் இருந்து மணிப்பூருக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து நேரடியாக கள நிலவரத்தை அறிந்து கொண்டது. அதன்பிறகு குடியரசுத்தலைவரை சந்தித்து மனு அளிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. அதன்படி நாளை சந்திக்க திட்டமிட்டு இருக்கும் நிலையில், இன்று அமித்ஷா குடியரசுத்தலைவரை சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications