"விசில்" அடித்த ஸ்டாலின்.. பூரித்து போய் கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை.. டெல்லியை அசரடித்த முதல்வர்கள்
ஸ்டாலினின் டெல்லி வருகை குறித்து கெஜ்ரிவால் பூரித்து சொல்கிறார்
டெல்லி: கல்வியின் முன்னோடி மாநிலத்தின் முதல்வர் ஸ்டாலின், டெல்லி அரசு பள்ளிகளை பார்வையிட்டது எங்களுக்கு பெருமையானது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பூரித்து சொல்லி உள்ளார்.
டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் நம் தமிழக முதல்வர் ஸ்டாலின்.. 2வது நாளான இன்று மேற்கு டெல்லி, வினோத்நகரில் உள்ள அரசு மாதிரி பள்ளியை பார்வையிட்டார்.
பள்ளியை பார்வையிட வந்த ஸ்டாலினை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றார்.. அந்தப் பள்ளி மாணவர்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு மலர் கொடுத்து வரவேற்றனர்.

விளக்கம்
பின்னர் அந்த அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் பாடங்கள் எப்படி கற்பிக்கப்படுகிறது, ஏசி கிளாஸ் ரூம்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய இலவசக் கல்வி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது குறித்தெல்லாம் ஸ்டாலினுக்கு, கெஜ்ரிவால் விளக்கமாக சொன்னார்.. அந்த பள்ளியின் கீழ் தளத்தில் உள்ள ரூமில் "மாதிரி பள்ளி" தொடர்பான வீடியோ ஒன்றும் திரையிடப்பப்பட்டது... அதேபோல, மகிழ்ச்சி வகுப்பு என்று சொல்லப்படும் ஹேப்பி கிளாஸ் என்றால் என்ன என்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்..

விசில்
மாணவர்களுக்கான நீச்சல் போட்டியை தொடங்கி வைத்தார் ஸ்டாலின். விசில் ஊதி போட்டியை அவர் தொடங்கி வைத்தார்... இறுதியாக முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது, பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரிவினர் பயன்பெறும் நோக்கில் இவை அமைந்துள்ளன... டெல்லியில் உள்ள மாதிரி பள்ளி எப்படி நடந்து கொண்டிருக்கிறதோ, அதேபோலவே ஒரு பள்ளியை தமிழநாட்டில் கூடிய சீக்கிரம் நாங்களும் உருவாக்கப் போகிறோம்.. அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது..

கெஜ்ரிவால்
அந்த பணிகள் முடிந்து, பள்ளியை திறக்கிற நேரத்தில் கண்டிப்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலையும் அழைப்போம்.. அவரும் வருவார், வரவேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்" என்று நெகிழ்ந்து சொன்னார். முதல்வரின் இந்த டெல்லி வருகையானது, கெஜ்ரிவாலுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது... ஸ்டாலின் கேட்ட அத்தனை சந்தேகங்கள், கேள்விகளுக்கும் ஆர்வமாக கெஜ்ரிவால் விளக்கி சொல்லி கொண்டே இருந்தார்..
Recommended Video

பூரிப்பு - பெருமிதம்
இதன்பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் உள்ள எங்களுடைய பள்ளிகளுக்கும், மொஹல்லா கிளினிக்குகளுக்கும் வருகை தந்து அவற்றை பார்வையிட்டு உள்ளார்... எங்களுடைய பள்ளிகளை அவர்களுக்கு காட்சிப்படுத்தியது எங்களுக்கு கிடைத்த கவுரவம்.. மருத்துவர்கள் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.. கல்வியின் முன்னோடி மாநிலத்தின் முதல்வர், டெல்லி அரசு பள்ளிகளை பார்வையிட்டது எங்களுக்கு பெருமையானது" என்றார்.












Click it and Unblock the Notifications