'அந்த 2 விமானங்கள்..' ஐரோப்பாவுக்கு பரவிய ஓமிக்ரான்.. சூப்பர் ஸ்ப்ரெட்டர்களாகும் சர்வதேச விமானங்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில், 2 விமானங்கள் நெதர்லாந்து நாட்டிற்கும் ஓமிக்ரான் பரவ காரணமாக அமைந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவதைத் தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்,

கடந்த சில நாட்களாகவே ஓமிக்ரான் உருமாறிய கொரோனா தான் உலகெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த உருமாறிய கொரோனா இதுவரை 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது.

சில நாடுகள் மட்டும் தென் ஆப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்துக்கு மட்டும் தடை விதித்துள்ளது. அதேநேரம் பெரும்பாலான நாடுகளில் சர்வதேச விமான போக்குவரத்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.

முதல் விமானம்

முதல் விமானம்

கடந்த வெள்ளிக்கிழமை தென் ஆப்பிரிக்காவிலிருந்து நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிற்கு 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த KL592 விமானம் தான் இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அமெரிக்கா போன்ற சில நாடுகளில் மட்டுமே தடுப்பூசி சான்றிதழைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதியை கொண்டிருக்கிறது. அதேநேரம் மற்ற நாடுகளில் தடுப்பூசி சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் இல்லை. இந்த விமானத்தில் வந்த சிலருக்குத் தான் நெதர்லாந்தில் ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

2ஆவது விமானம்

2ஆவது விமானம்

அதேபோல 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தென் ஆப்பிரிக்காவில் இருந்து மற்றொரு KLM விமானத்தில் வந்தவர்களிலும் 14 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து விமானத்தில் வந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் விமான அதிகாரிகளை ஏமாற்றிவிட்டு, ஸ்பெயின் தப்பிச் செல்ல முயன்ற ஒரு தம்பதியை நெதர்லாந்து போலீசார் கைது செய்தனர்.

காற்றில் பறக்கும் விதிகள்

காற்றில் பறக்கும் விதிகள்

இதுபோன்ற நீண்ட விமானத்தில் சிலர் மட்டும் முறையாக மாஸ்க்குகளை அணிகின்றனர். இதை விமானப் பணிப்பெண்கள் முறையாக கண்காணிப்பதில்லை எனப் பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், காத்திருக்கும் அறை தொடங்கி செக் இன் செய்யும் இடம், விமானம் என அனைத்திலும் பயணிகள் ஒரே இடத்தில் தான் செலவிட்டனர். இதனால் மற்ற பயணிகளுக்கும் ஓமிக்ரான் பாதிப்பு பரவியிருக்கும் வாய்ப்புகள் அதிகம். இதையடுத்து இந்த 2 விமானங்களில் வந்த அனைத்து பயணிகளுக்கும் RT PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

விமானங்கள் ரிஸ்க் தான்

விமானங்கள் ரிஸ்க் தான்

கொரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில் சொகுசு கப்பல்களால் வைரஸ் பரவியது. இப்போது விமானங்களும் கிட்டதட்ட அதேநிலையில் தான் உள்ளது. இதனால் விமானங்களின் மூலம் எங்கு பல்வேறு நாடுகளும் ஓமிக்ரான் உருமாறிய வைரஸ் பரவுமோ என அஞ்சப்படுகிறது. ஏனென்றால் விமானச் சேவை மூலமே பல்வேறு நாடுகளுக்கும் ஓமிக்ரான வைரஸ் பாதிப்பு பரவுகிறது.

பல விதமான கட்டுப்பாடுகள்

பல விதமான கட்டுப்பாடுகள்

அனைத்து நாடுகளிலும் விமான பயணிகளுக்கு ஒரே கட்டுப்பாடுகள் இல்லை. ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு விமான நிறுவனத்திலும் ஒவ்வொரு கட்டுப்பாடுகள் உள்ளன. இதன் காரணமாகவும் மாஸ்க் தொடர்பான விதிகள் விமானங்களில் பலரும் முறையாகப் பின்பற்றுவதில்லை என்பதாலுமே ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கொரோனா பாதிப்பு அடுத்து மீண்டும் மோசமான நிலைக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது.

சில வாரங்கள் ஆகும்

சில வாரங்கள் ஆகும்

ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட சில நாட்கள் மட்டுமே ஆகிறது. இந்த வைரஸ் எவ்வளவு தீவிரமானது, எப்படிப் பரவும் என்பது குறித்த தகவல்கள் நம்மிடம் இல்லை. உலக சுகாதார அமைப்பும் இதனைக் கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளதால் இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. ஓமிக்ரான் கொரோனா குறித்த ஆய்வுகள் நடந்து வரும் நிலையில், கூடுதல் தகவல்கள் தெரிய சில வாரங்கள் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது.

வல்லுநர்கள் கவலை

வல்லுநர்கள் கவலை

விமான போக்குவரத்தைப் பொறுத்தவரை அனைத்து நாடுகளிலும் ஒரே விதிமுறை என்ற சூழல் இல்லை. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை உடனடியாக முறைப்படுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் வரும் காலங்களில் ஓமிக்ரான் போன்ற உருமாறிய வைரஸ்கள் பிற நாடுகளுக்குப் பரவும் வாய்ப்புகள் உள்ளதாகப் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்,

உருமாறிய கொரோனா

உருமாறிய கொரோனா

இதற்கு முந்தைய உருமாறிய கொரோனா வகைகளைக் காட்டிலும் ஓமிக்ரான் கொரோனா வித்தியாசமானது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓமிக்ரான் கொரோனாவின் புரோத ஸ்பைக்கில் 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் உள்ளதாகவும் இதுவரை எந்த உருமாறிய கொரோனா வைரசிலும் இந்தளவுக்கு மாற்றங்களைக் கண்டறியவில்லை என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலக சுகாதார அமைப்பும் இந்த ஓமிக்ரான் கொரோனா வகையைக் கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+