"10 நிமிடங்கள் கொடுங்க சார்!" சுப்ரீம் கோர்ட்டில் கேட்ட குரல்.. தனி ஆளாக வாதாடி ஜெயித்த +2 மாணவன்
டெல்லி: மருத்துவச் சேர்க்கை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்துவிட்டுக் கலையும்போது, ஒரு 19 வயது இளைஞரின் குரல் வந்துள்ளது. அந்த சாதாரணக் குரலும் அடுத்த 10 நிமிடங்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்த வாதங்களும் இப்போது நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. யார் அந்த இளைஞர், சுப்ரீம் கோர்ட்டில் அவர் செய்தது என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு வழக்கு ஒன்றின் விசாரணையை முடித்துக் கலைந்து கொண்டிருந்தது. அப்போது, "மேலும் "10 நிமிடங்கள் கொடுங்கள் சார்" என்ற ஒரு குரல் கேட்டது. அந்தக் குரல் மூத்த வழக்கறிஞர் உடையதோ அல்லது அரசியலமைப்பு வல்லுநர் உடையதோ இல்லை.. மாறாக ஜபல்பூரை சேர்ந்த 19 வயது அதர்வா சதுர்வேதி என்பவரது குரல் தான் அது.

அதர்வா சதுர்வேதி
+2 வகுப்பு முடித்த சதுர்வேதிக்கு மருத்துவராக வேண்டும் என்பதே கனவு. அதற்கு ஒரு சிக்கல் வந்தபோது தான், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் 10 நிமிடம் கோரிக்கை விடுத்தார். அந்த 10 நிமிடம் அவரது வாழ்க்கையை மாற்றியது. இந்திய அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ், உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, சதுர்வேதிக்கு மருத்துவ சீட் வழங்க உத்தரவிட்டது.
அதர்வா சதுர்வேதி சட்டப் படிப்பு படிக்கும் மாணவர் இல்லை. அவரது ஆசை மருத்துவராக வேண்டும் என்பதுதான். இதற்காக அவர் ஒரு முறை இல்லை.. இரண்டு முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இருப்பினும், அவரது மாநில அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை. இதனால் இரு முறையும் அவருக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் தான் அவராகவே வாதாடி இருக்கிறார். அதில் தான் அவருக்குத் தற்காலிக எம்பிபிஎஸ் சீட் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிக்கல்
அதர்வா பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகள் இரண்டிலும் தேர்ச்சி பெற்றாலும், மருத்துவத்தையே அவர் தேர்ந்தெடுத்தார். நீட்டில் இருமுறை தேர்ச்சி பெற்ற போதிலும், EWS இடஒதுக்கீட்டுக் கொள்கையை மபி அரசு அமல்படுத்தாததால் அவருக்கு எம்பிபிஎஸ் இடம் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவர், ஜபல்பூர் உயர் நீதிமன்றத்திலேயே வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கிலும் கூட அதர்வா தனது வழக்கைத் தானே வாதடினார். அங்கு அதர்வாவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வரவில்லை என்றாலும், "நீங்கள் ஒரு வழக்கறிஞராக வேண்டுமே தவிர, மருத்துவராக அல்ல. தவறான துறையில் இருக்கிறீர்கள்" என்று ஐகோர்ட் நீதிபதியே கூறியுள்ளார்.
தந்தை மனோஜ் சதுர்வேதி
அதர்வாவின் தந்தை மனோஜ் சதுர்வேதி ஒரு வழக்கறிஞர்தான். ஆனால் அவர் உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது இல்லை. கொரோனா காலத்தில் நீதிமன்றங்கள் வீடியோ கான்பரன்சிங் முறையில் இயங்கியபோது, அவரது தந்தை வீட்டில் இருந்தபடியே வாதிட்டார். அதைப் பார்த்தே சதுர்வேதி நீதிமன்றத்தில் எப்படி வாதிட வேண்டும் என்பதை கற்றுள்ளார்.
இது குறித்து தந்தை மனோஜ் கூறுகையில், "என் மகன் சட்டம் படித்ததில்லை.. ஆனால், அவன் அனைத்தையும் கவனித்தான். எவ்வளவு பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பதையெல்லாம் கற்றுக்கொண்டான். உண்மையில், மனுக்களை ஸ்கேன் செய்து பதிவேற்றுவது எப்படி என்பதை அவன்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தான்" என்றார்.
நீதிமன்றம் உத்தரவு
தனது வழக்கிற்காகத் தானே வாதிட முடிவு செய்த அதர்வா இதற்காகப் பயிற்சி பெற்றார். ஆன்லைனில் நீதிமன்ற நடவடிக்கைகளைக் கவனித்தார். உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை ஆய்வு செய்தார். அதன் பிறகே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் தான் இப்போது அதர்வாவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்து, மருத்துவக் கனவும் நிறைவேறி இருக்கிறது.
அதர்வா நீட் தேர்வில் இருமுறை தேர்ச்சி பெற்றுள்ளதைக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், அரசின் கொள்கை சிக்கல்களால் மாணவர் சேர்க்கையை மறுக்கப்படுவதை ஏற்க முடியாது என்றனர். மேலும், 2025-26 கல்வி ஆண்டுக்கான சேர்க்கையை உத்தரவை வழங்கும்படியும் அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது அதர்வாவின் சட்ட வாதத் திறமையை எடுத்துக் காட்டுவதாகவே இருக்கிறது.!
-
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"மாதம் ரூ.90,000.." வாயை பிளக்க வைக்கும் பானி பூரி வியாபாரியின் வருவாய்.. விவாதமான வீடியோ -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications