ஒரு செல்பி 23,000 ரூபாய்! விராட் கோலி கிட்ட சென்று.. மிரள வைத்த வெறித்தனமான ரசிகர்! அடடே பாருங்க
டெல்லி: கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தனது ஹீரோ கோலியைச் சந்திக்க என்னவெல்லாம் செய்து இருக்கிறார் என்பதைக் கேட்டால் பிரமித்துப் போய்விடுவோம்.
நமது நாட்டில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் ரசிகர்கள் குறித்து தனியாகச் சொல்லத் தேவையில்லை. உணவு, தண்ணீரை எல்லாம் மறந்து கிரிக்கெட் போட்டிகளை மக்கள் ஆர்வமாகப் பார்ப்பது தொடரவே செய்கிறது.
நாம் நினைத்துக் கூட பார்க்காத முறையில், பல நேரங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் ஷாக் சம்பவங்களைச் செய்வார்கள். அப்படியொரு சம்பவம் தான் இப்போது மீண்டும் நடந்து இருக்கிறது.

கிரிக்கெட்
தென் ஆப்பிரிக்கா அணி இப்போது இந்தியா வந்துள்ளது. மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டி தொடரில் இரு அணிகளும் மோதிக் கொள்கின்றனர். இப்போது வரை இரண்டு டி20 போட்டிகள் நிறைவடைந்து உள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் வென்றுள்ள இந்தியா ஏற்கனவே தொடரைக் கைப்பற்றிவிட்டது. இதில் கவுஹாத்தியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் அட்டகாசமான பேட்டிங் காரணமாக 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெறித்தனமான ரசிகர்
அந்த போட்டிக்கு முன்னதாக வினோதமான சம்பவம் ஒன்று நடந்து உள்ளது. தனது ஆஸ்தான ஹீரோ விடோர் கோலியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு 23 ஆயிரம் ரூபாயைச் செலவழித்து உள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா! கவுஹாத்தியை சேர்ந்தவர் ராகுல் ராய். சுமார் 11 ஆண்டுகளுக்கு மேலாகவே இவர் விரோட் கோலியின் வெறித்தனமான ரசிகராக உள்ளார். இவர் தான் இந்த சம்பவத்தைச் செய்துள்ளார்.

பார்க்க முடியவில்லை
இரண்டாவது டி-20 போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணி கடந்த 29ஆம் தேதி அசாம் சென்று உள்ளனர். அப்போது அவர்களைக் காண கோபிநாத் போர்டோலோய் விமான நிலையத்தில் பொதுமக்கள் திரண்டு இருந்தனர். எப்படியாவது தனது ஹீரோ கோலியைச் சந்தித்துப் பேசிவிட வேண்டும் என்பதில் ராகுல் ராய் உறுதியாக இருந்தார். இருப்பினும், கூட்டம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக ராகுல் ராயால் கோலியை சந்திக்க முடியவில்லை.

பிளான் பி
இது குறித்து அவர் கூறுகையில், "நான் அங்கு ஏர்போர்ட்டில் தான் இருந்தேன். கூட்டம் அதிகமாக இருந்ததால் என்னால் அருகே செல்ல முடியவில்லை. கோலி அடுத்து 4 நாட்களுக்கு எங்கள் ஊரில் தான் இருப்பார் என்று எனக்குத் தெரியும். அவரை சந்தித்துப் பேச எனக்கு இது மட்டும் தான் ஒரே வாய்ப்பு என்பதும் எனக்குத் தெரியும். மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது பார்க்கச் சென்றேன். அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளால் அது நடக்கவில்லை" என்று அவர் தெரிவித்தார்.

கடைசி முயற்சி
இருப்பினும், ராகுல் ராய் இதற்காக எல்லாம் சோர்ந்துவிடவில்லை. எப்படியாவது கோலியை சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து அவர் இந்தியா வீரர்கள் தங்கியிருந்த அதே ஹோட்டலில் ரூமை புக் செய்தார். அது பெரும் பணக்காரர்கள் தங்கும் சொகுசு ஹோட்டல். மேலும், அப்போது இந்திய அணி வீரர்களும் அங்கு இருந்ததால், விலை அதிகமாக இருந்தது. ஆனால், இதைப்பற்றி எல்லாம் யோசிக்காத ராகுல் ராய் அந்த சொகுசு ஹோட்டலில் ஒரு நாள் தங்க புக் செய்தார்.

சந்திப்பு
அந்த ஹோட்டலில் ஒரு நாள் தங்க வாடகை எவ்வளவு தெரியுமா! 23 ஆயிரம் ரூபாய்.. இருப்பினும், கோலியைப் பார்த்தே தீர வேண்டும் என்பதால் அவர் ஹோட்டல் அறையை புக் செய்துள்ளார். இந்தப் பெரும் போராட்டத்திற்குப் பின்னர் ஒரு வழியாக ஹோட்டலில் பிளாக் பாரஸ்ட் சாப்பிடும்போது கோலியை சந்தித்து உள்ளார் ராகுல் ராய். ரூமை 23 ஆயிரம் கொடுத்து புக் செய்த கதையையும் கோலியிடம் சொல்லியுள்ளார். அவர் எடுத்துச் சென்ற ஃபோட்டோ பிரேமில் ஆட்டோகிராப் போட்டுத் தந்த கோலி, செல்பியும் எடுத்துக் கொண்டதாகப் பூரிக்கிறார் அந்த இளைஞர்.












Click it and Unblock the Notifications